மஹா சிவராத்திரியை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனை..

மஹா சிவராத்திரி விரதத்தினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்து சயம மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சைவ மக்களின் சிறப்பு விரதங்களில் ஒன்றான மஹா சிவராத்திரி விரதம் எதிர்வரும் (2021.03.11) வியாழக்கிழமை அன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது. இச்சிவராத்திரி விரதத்தினை இந்து ஆலயங்களில் சிறப்புற நிகழ்த்த ஊக்கம் நல்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். அதற்கமைய இலங்கையில் சைவத் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற பிரதேச செயலாளர் பிரிவுகளை மையப்படுத்தி, விசேட வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. அதன்போது சைவ சிறார்கள் ஆலயங்களுக்குச் சென்று சிவராத்திரி நோன்பின் பெருமையை உணர்ந்து வழிபாடுகளில் ஈடுபடவும், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பக்தி…

மேலும் வாசிக்க

டெஸ்போட் கீழ்ப்பிரிவு புனித செபஸ்தியர் ஆலயம் இன்று திறந்து வைப்பு.

டெஸ்போட் கீழ்ப்பிரிவு நானுஓயாவில் நிர்மாணிக்கப்பட்ட புனித செபஸ்தியர் ஆலயம் 28.02.2021 ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினம் கண்டி மறை மாவட்ட ஆயர் பேரருட். திரு. ஜோசப் வியானி பர்னாந்து ஆண்டகை அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது அரசாங்கத்தின் சுகாதார விதிமுறைகளுக்கமைய மட்டுப்படுத்தப்பட்ட மக்களின் வருகையுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

புஸ்ஸல்லாவ சிவபுரத்தில்-கும்பாபிசேகம் ..

புஸ்ஸல்லாவ சிவபுரத்தில் (பழைய வசந்தா தியேட்டருக்கு அருகில்) “காசீஸ்வரர்” சிவலிங்கமும் பிள்ளையார் சிலையும் நாகசந்தான கோபாளர் சிலையும் நேற்று (03.02.2021) பிரதிஷ்டை செய்யப்பட்டு தற்போது   எண்ணெய் காப்பு நடைபெற்று வருகின்றது. இன்று  04.02.2021 காலை  9.00 மணி முதல் எண்ணெய் காப்பு  நடைபெற்று தொடர்ந்து கும்பாபிஹேகம் நடைபெறும்  பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிவனின் அருளை பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.“ஓம் நமசிவாய” பா.திருஞானம்

மேலும் வாசிக்க

முருகப்பெருமானின் விரதங்களில் சிறப்பிடம் பெறுகின்ற தைப்பூசத் திருநாள் இன்று..

முருகப்பெருமானின் விரதங்களில் சிறப்பிடம் பெறுகின்ற தைப்பூசத் திருநாள் இந்துக்களால் உலகளாவிய ரீதியில் இன்று கொண்டாடப்படுகின்றது. தை மாதத்தில் வரும் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் கூடிய நாள், தைப்பூசத் திருநாளாகும். முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக பழனியில் தனித்து நின்றபோது அசுரர்களை அழிப்பதற்காக அன்னை பராசக்தி ஞானவேல் அருளியாக நாளாக தைப்பூசம் விளங்குகின்றது. முருகன் கோவில்களில் இன்று சிறப்புப் பூஜைகள் நடைபெறுவதுடன், பக்தர்கள் நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றுவர்.

மேலும் வாசிக்க

பன்விலை-கொரோனா நோயிலிருந்து மக்கள் விடுபடவேண்டி கருப்பண்ண சுவாமி பூசை..

கண்டி பன்விலை ஹாத்தலை கிராமத்தில் கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேகம் 2021/01/17 ம் திகதி வெகுவிமர்சியாக இடம்பெற்றது. பிரதம குரு மித்திரன் தலைமையில் குழதெய்வ பஜனை பாராயனத்தோடு பூசை இடம்பெற்றது. குறித்த பூசை கொரோனா நோயிலிருந்து மக்கள் விடுபடவேண்டி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. சிவா

மேலும் வாசிக்க

அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம் ..

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் அனைத்து அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது. அதனடிப்படையில் பௌத்த, ஹிந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் அறநெறி பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இவ்வாறு அறநெறி பாடசாலைகளின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க

கொரோனா பாதிப்பிலிருந்து நாட்டை மீட்டெடுக்க கோல்புறூக்கில் விசேட வழிபாடு ..

எமது நாட்டின் கொரோனா தொற்று காரணமாக 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல இடங்கள் முடக்கப்பட்டுள்ளது. நாட்டை மீட்டெடுக்கும் வகையில் சிவன் அருள் இல்லத்தின் தலைவர் வைத்தியர் ஜெயேந்திரன் நமசிவாயம் வேண்டுகோளுக்கிணங்க அக்கரப்பத்தனை கோல்புறூக் இந்து ஆலயம் பௌத்த விகாரையிலும்,விசேட வழிபாடு இடம்பெற்றது. இதற்கான ஏற்பாட்டினை 475 ஜே கிராம சேவகர் பிரிவு உத்தியோகத்தர். ஆர் குழந்தைவேல் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதற்கான சகல ஒழுங்குகளையும் மலையக சமூக அபிவிருத்தி பேரவையின் ஒருங்கிணைப்பில் நிகழ்வுகள் அனைத்தும் இடம்பெற்றது. இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றிய வகையில் சிலருக்கும் ஆசி வேண்டி சர்வமத பிரார்த்தனை களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது . படங்கள் அக்கரப்பத்தனை ‌நிருபர்

மேலும் வாசிக்க

நாடு கொரோனா பிடியில் இருந்து விடுபட பலாங்கொடை ஆலயத்தில் விசேட ஆசிர்வாத பூஜை..

இலங்கைவாழ் அனைத்து மக்களும் கொரோனா பிடியில் இருந்து விடுபட பலாங்கொடை ஆலயத்தில் விசேட ஆசிர்வாத பூஜை இன்று (20) இடம்பெற்றது.

மேலும் வாசிக்க

மஸ்கெலியா பிரவுன்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சர்வ மத வழிபாடு…

உலகில் நிலவி வரும் கொரோணா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபட சிறப்பு சர்வ மத வழிபாடு பூஜை நிகழ்வு இன்று (06/12) மஸ்கெலியா பிரவுன்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபை தோட்ட பொது மக்கள் இணைந்து சர்வ மத வழிபாட்டினை ஏற்பாடு செய்திருந்தினர். இந்த பூஜை நிகழ்வை பிரவுன்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு ஆனந்தகுமார் அவர்களின் தலமை ஏற்று நடத்தினார். இந்த சர்வ மத வழிபாட்டு நிகழ்வில் மஸ்கெலிய சுவர்ணாய விகாரை வணக்கத்திற்குரிய தபோவாய சுசீத தேரர் அவர்களும் மஸ்கெலிய பள்ளிவாசல் மௌலவி பைசூர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். பிரதான யாக பூஜையை கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ ஸ்கந்தராஜா அவர்கள் நடாத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

மட்டக்களப்பு-ஆலமரமொன்றில் அம்மனின் திருவுருவம் படையெடுத்த பக்தர்கள்..

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆலமரமொன்றில் அம்மனின் திருவுருவம் இன்று (28) தெரிவதால் பக்தர்கள் படையெடுத்து வருவதை காண முடிகின்றது. குறித்த ஆலயத்திலுள்ள எண்பது வருடம் பழமைவாய்ந்த ஆலமரத்தின் விழுதில் அம்மனின் உருவம் பொறிக்கப்பட்டது போன்று காட்சி அளிப்பதை தொடர்ந்து மக்கள் அங்கு வருவதை காண முடிகிறது. குறித்த இடத்திற்கு வரும் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதையும் பூசைகளும் இடம்பெறுகின்றது நாட்டில் தற்போது அசாதாரன சூழ்நிலையும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அம்மாள் உருவம் தோன்றியதால் ஏதும் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் மிகுந்த பயத்துடன் குறித்த உருவச்சிலையும் ஆலயத்திலுள்ள அம்பாளையும் வழிபட்டு வருவதைக் காணமுடிகின்றது. வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ…

மேலும் வாசிக்க