மழையுடனான வானிலை நாளை (03) முதல் குறைவடையக்கூடும்.

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளை (03) குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் மீண்டும் மழை வீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி களுத்துறை – அகலவத்த பகுதியில் பதிவாகியுள்ளது. அங்கு 344 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.வலல்லாவிட்ட பகுதியில் 290 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும், ஹங்வெல்லயில் 270 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.கடும் மழையினால் காலி வக்வெல்ல வீதி, காலி – பத்தேகம மற்றும் காலி – மாபலகம வீதி உள்ளிட்ட பல இடங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.காலி, இமதுவ, ஹபராதுவ, அக்மீமன பகுதிகளின் தாழ்நிலப் பிரதேசங்களும் விவசாயக் காணிகளும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.அறுவடைக்கு தயாராகவிருந்த விவசாயக் காணிகளும் அவற்றில் அடங்கும்.எம்பிலிப்பிட்டிய, தோரகொலயாய மலபலாவ பகுதியை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் 15 வீடுகள் சேதமடைந்துள்ளன.அதிக…

மேலும் வாசிக்க

இன்றைய சிந்தனை

வாழ்க்கையில் வெற்றிப்பெற வேண்டும் என்றால் ஓடுபவனாக இருங்கள். துரத்துபவனாக இருக்காதீர்கள். ஓடுபவனுக்கு பல வழிகள் உண்டு. துரத்துபவனுக்கு ஒரே வழிதான். அவன் பின்னால் மட்டும் தான் ஓட வேண்டும். ஆனால் ஓடுபவனாக மட்டும் இருந்தால் எப்படியும் எங்கும் ஓட முடியும்.! வழங்குபவர் – பொகவந்தலாவை சரண்

மேலும் வாசிக்க