உலகப்புகழ்பெற்ற ஆர்ஜன்டீனாவின் காற்பந்தாட்ட வீரர் டியகோ மரடோனா மாரடைப்பால் மரணம் …

உலகப்புகழ்பெற்ற ஆர்ஜன்டீனாவின் காற்பந்தாட்ட வீரர் டியகோ மரடோனா(60) மாரடைப்பால் காலமானதா க சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு.

மேலும் வாசிக்க

பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவருக்கு கொரோனா தொற்றுறுதி!

பங்களாதேஷ் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் மக்முதுல்லா 2 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் டெஸ்ட் அணியின் தலைவர் மொமினுல் ஹக்கும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். லேசான அறிகுறியுடன் பாதிப்பை சந்தித்து இருக்கும் மொமினுல் ஹக்கும், அவரது மனைவியும் வீட்டில் தனிமைப்படுத்தலை கடைப்பிடித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏற்கனவே பங்களாதேஷ் அணி வீரர்கள் அபு ஜெயத், சைப் ஹஸசன், மொட்டசா உள்ளிட்ட வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்கள். கொரோனா பாதிப்பு காரணமாக இந்த மாத இறுதியில் நடைபெறும் உள்ளூர் இருபதுக்கு – 20 சுற்றுப் போட்டியில் மொமினுல் ஹக் ஆடமாட்டார் எனத் தெரிகிறது.

மேலும் வாசிக்க

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் இன்று யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்திற்கு விஜயம்.

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் சமூக உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க நேற்றையதினம் யாழ்ப்பாணத்துக்கு சென்ற இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டுள்ளார். குறித்த விஜயத்தின் போது, கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே , பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன், யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனல்ட் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருதமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

பாகிஸ்தானின் கனவை தகர்க்குமா சிம்பாப்வே ? முதல் இருபதுக்கு 20 போட்டி இன்று.

பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. ராவல்பின்டி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 04 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 02 க்கு 01 என கைப்பற்றியிருந்தது. எனினும் கடைசிப்போட்டியில் அபாரமாக செயற்பட்ட ,சிம்பாப்வே அணி சுப்பர் ஓவரில் த்ரில் வெற்றியீட்டியிருந்தது. சுப்பர் ஓவரில் வெற்றியீட்டிய உற்சாகத்துடன் சிம்பாப்வே அணி இன்றைய ஆட்டத்தில் களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேவேளை இருபதுக்கு 20 அரங்கில் நான்காமிடத்தில் நீடிக்கும் பாகிஸ்தான் மீண்டும் தமது இருப்பை சொந்த மண்ணில் உறுதிப்படுத்துமா என்ற ஆர்வத்தில் அந்நாட்டு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இறுதியாக பாகிஸ்தான் அணி விளையாடியுள்ள ஐந்து இருபதுக்கு 20 போட்டிகளில் மூன்றில் வெற்றியீட்டியுள்ளது. சிம்பாப்வே அணியும் இருபதுக்கு 20…

மேலும் வாசிக்க

கோஹ்லியின் படை ப்ளே ஓப் சுற்றை உறுதி செய்யுமா – வோர்னரின் முயற்சி பலிக்குமா ?

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே நடப்பு சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஓப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் அணி , டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைசஸ் அணிகள் ப்ளே ஓப் சுற்றுக்காக போராடி வருகின்றன. அத்துடன் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் நேற்றைய போட்டியில் வெற்றியீட்டி ப்ளே ஓப் சுற்றுக்கு முன்னேறும் கனவுடன் காத்திருக்கிறது. அதேசந்தர்ப்பத்தில் லோகேஸ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் போராட்டத்துக்கு மத்தியில் ப்ளே ஓப் சுற்றுக்கான வாய்ப்பினை பெறும் நோக்குடன் விளையாடி வருகிறது. இந்த அணிகள் யாவற்றுக்குமான ப்ளே ஓப் சுற்று கனவை இன்று நடைபெறும் இரண்டு போட்டிகள் தீர்மானிக்கும் என்று குறிப்பிட்டால் அதில் தவறில்லை.…

மேலும் வாசிக்க

ப்ளே ஓப் சுற்றுக்கு முன்னேறுமா டெல்லி – தீர்மானம்மிக்க போட்டி இன்று.

கிரிக்கெட் அரங்கில் சூடுபிடித்துள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. தொடரில் ஐம்பது போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் ,நடப்பு சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஓப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி இன்று மாலை மூன்று முப்பதுக்கு டுபாயில் ஆரம்பமாகவுள்ள போட்டியில் இளம் அணியாக கருதப்படும் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. புள்ளிப்பட்டியலை பொருத்தவரையில் 12 போட்டிகளில் விளையாடி , அதில் ஏழு போட்டிகளில் வெற்றியுடன் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி வெற்றியீட்டும் பட்சத்தில் இரண்டாமிடத்துக்கு முன்னேறும் என்பதுடன் , ப்ளே ஓப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும். மாறாக இன்றைய போட்டியில் டெல்லி…

மேலும் வாசிக்க

லங்கா பிரீமியர் லீக்கில் மூன்று தமிழ் வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

லங்கா பிரீமியர் லீக்கில் (எல்.பி.எல்) யாழ்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த இரு வீரர்களும் மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஒருவரும் என மொத்தமாக மூன்று தமிழ் வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். லங்கா பிரீமியர் லீக்கில் ஐந்து அணிகள் பங்குபற்றுகின்றன. இவ் அணிகள் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், தம்புள்ளை, காலி போன்ற முக்கியமான நகரங்களின் பெயரில் அழைக்கப்படுகின்றன. இதில் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் மூன்று தமிழர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் யாழ்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியையும் ஒருவர் யாழ்பாணம் மத்திய கல்லூரியையும் சேர்ந்தவர்களாவார்கள். சென்ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த க.கபில்ராஜ், தெ.டினோசன் ஆகியோரும் மத்திய கல்லூரியைச் சேர்ந்த வி.வியஸ்காந் ஆகியோருமே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் கொரோனா தொற்றுறுதி.

உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

மலையகம் போற்றும் மைந்தன் குமார் சண்முகேஸ்வரன்

மறுமலர்ச்சி நோக்கிய மலையக பயணத்தில் குறிப்பாக விளையாட்டு துறையில் சண்முகேஸ்வரனின் சாதனைகள் நாளைய தலைமுறையின் முறையான வழிநடப்பில் முக்கிய பங்கேற்கும் என்பதில் மாற்று கருத்துகள் இல்லை. வெளிஓய புதுக்காடு பகுதியை சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் எனும் பெயர் சர்வதேச மெய்வல்லுனர் போட்டி வரையிலும் எதிரொலித்தது. அதுமட்டுமன்றி கடந்த (2018,2019,2020) ஆகிய 3 வருடங்களாக Army மரதனில் (Army road race) முன்னைய சாதனைகளை முறியடித்த வெற்றியாளராகவும் தன்னை பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து சண்முகேஸ்வரனை தலைப்பாக்கிய செய்திகளும் சஞ்சிகைகளும் வெளிவந்த வண்ணம் இருந்தன. மலையகம்.lk ஊடாக இவருடனான நேர்காணலில் இவர் எதிர்நோக்கிய பல சவால்கள், கடந்து வந்த பாதை மற்றும் குடும்ப பிண்ணனி குறித்து வெளிப்படையான உண்மைகளையும் தெரிவித்தார். அதேவேளை இவரின் வெற்றிக்கு முதுகெலும்பாக கைகோர்த்த மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் மற்றும் திரு.பாலசுப்ரமணியம் ஐயா அவர்களுக்கும்…

மேலும் வாசிக்க

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி!

துபாயில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி. முதலில் பேட் செய்த பஞ்சாப் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களை குவித்தது.  பஞ்சாப் அணிக்காக அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் 63 ரன்களை குவித்திருந்தார். இதனையடுத்து சென்னை அணி 179 ரன்களை விரட்டியது. சென்னை அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் வாட்சனும், டூப்ளஸியும் இணைந்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.  17.4 ஓவர் முடிவில் விக்கெட் ஏதும் இழப்பின்றி 181 ரன்களை குவித்து 14 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது சென்னை.

மேலும் வாசிக்க