செவ்வாய்க் கிரகத்தில் நாசாவின் கலம் நெறிப்படுத்தி தரையிறக்கினார் சுவாதி மோகன்!

விஞ்ஞான வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தில் தரைக்கலம் ஒன்றை தரையிறக்கும் முயற்சி சற்று நேரத்திற்கு முன்னர் வெற்றிகரமாக நடந்தேறியது. செவ்வாய்க் கிரகத்தில் உயிர்க்கலங்கள் உண்டா என்பதை கண்டறியும் இம்முயற்சி வரும் நாட்களில் மேலதிக வியத்தகு விடயங்களை அறியத்தரலாம். எனினும் கடந்த ஆண்டு யூலை 30ஆம் நாள் ஏவப்பட்ட விண்கலம் முதல் இன்று தரையிறங்கும் வரை ஏன் அதன் வடிவமைப்பு உட்பட முழுமையாக தலைத்துவம் வழங்கிய சுவாதி மோகனே இதன் மையக்கருவாக இருந்தார். பெங்கலூருவில் பிறந்து ஒரு வயதில் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து இன்று நாசாவின் முதன்மை விஞ்ஞானியாகி இன்றைய வரலாற்று நிகழ்வை உலகத் தொலைக்காட்சிகளில் நெற்றியில் பொட்டுடன் நெறிப்படுத்திய சுவாதி மோகனைப் பார்த்த போது பெருமையாக இருந்தது. (nehru)

மேலும் வாசிக்க

முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட இருவருக்கு நாளை வரை விளக்கமறியல்.

லங்கா சதோசவின் வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட இருவருக்கு நாளை வரை விளக்கமறியல்.

மேலும் வாசிக்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீனப் பிரஜைகள் கொள்ளுப்பிட்டியில் கைது!

கொள்ளுப்பிட்டியிலுள்ள மாடிக் குடியிருப்பொன்றில் அனுமதிப்பத்திரமின்றி சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீனப் பிரஜைகள், 65 இலட்சம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க

Google Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.!

கூகுள் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை தனது வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை கூகுள் மீட் [Google Meet] அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. குறிப்பாக இந்த வீடியோ அழைப்பு சேவை பயனர்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் மாற்றி உள்ளது. இந்த கூகுள் மீட் பயன்பாடு ஆலோசனை கூட்டம் மற்றும் கல்வி சம்பந்தமான அழைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியம், ஆனாலும் சில மாற்றங்களை செய்ததுடன் இணையத்தில் மற்றும் ஐஒஎஸ், ஆண்ட்ராய்டு மொபைல் ஆப் பயன்பாடுகள் வழியாக அனைவரும் இலவசமாக வீடியோ அழைப்பை மேற்கொள்ளலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கூகுள் காலெண்டரைப் பயன்படுத்துபவர்கள், அங்கிருந்து எளிதாக தொடங்கவோ அல்லது மற்றவர்களை இணைக்கவோ முடியும் என கூறப்பட்டுள்ளது. பின்பு இந்த கூகுள் மீட் மூலம் ஒரு வீடியோ அழைப்பில் 100பேரை பங்கேற்க அனுமதிக்கிறது. அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு…

மேலும் வாசிக்க

அகிலம் வியந்த அறிவியல் மேதை!

‘நீ மிகவும் மோசமாகத் தேர்வு எழுதி இருக்கிறாய்; கணிதம், பெளதிகம் இரண்டைத் தவிர, வேறு எந்தப் பாடத்திலும் தேர்வு பெற வில்லை; மொழிகளில் உனக்குப் போதிய அறிவு இல்லை; இந்த நிலையில், நீ இங்குச் சேர விரும்புகிறாய். அது, உன் அறிவுக்கு மீறிய ஆசையாகும். நீ மறு படியும் பயிற்சிப் பள்ளிக்குச் சென்று படித்துத் தேர்ச்சிபெற வேண்டும். அப்படித் தேர்ச்சிபெற்று வந்தால், நான் உன்னைச் சேர்த்துக்கொள்கிறேன்” – இது, தொழில்நுணுக்கக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் தோற்ற ஒருவரைப் பார்த்து, ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத் தலைவர் சொன்னது. பின்னாளில், அந்தத் தேர்வில் தோற்ற மனிதர்தான், அகிலம் வியந்த அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அவருடைய பிறந்த தினம் இன்று!

மேலும் வாசிக்க

4 ஆண்டுகளுக்கு முன் பலியான தன் மகளுடன் உரையாடிய தாய். நெகிழ்ச்சியான வீடியோ!

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன் பலியான தன் மகளுடன், அவரது தாய் உரையாடிய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அசல் போலவே இருக்கும் கற்பனை காட்சிகளை நேரடியாக பார்க்கும் நவீன தொழில்நுட்பம் விர்சுவல் ரியாலிட்டி (வி.ஆர்) என்று அழைக்கப்படுகிறது. இதற்காக கற்பனையான ஒரு உலகத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் பயணிப்பது தான் இதன் சிறப்பம்சம். இந்த நிலையில், தென்கொரியாவை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று விர்சுவல் ரியாலிட்டியை பயன்படுத்தி இறந்துபோன நபர்களை அவர்களது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வைக்கும் புதுமையான முயற்சியை கையில் எடுத்தது. இந்த நிகழ்ச்சிக்கு ‘மீட்டிங் யூ’ என அந்த நிறுவனம் பெயர் சூட்டியது. இந்த நிகழ்ச்சியில் ஜாங் ஜி சங் என்ற பெண் கலந்து கொண்டார். அதில் கடந்த 2016-ல் மர்ம நோயால் இறந்துபோன தன்…

மேலும் வாசிக்க

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய தலைவராக ஜெயந்த டி சில்வா ..

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக ஜெயந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் IFS ஶ்ரீ லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவராக செயற்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு.

நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம், இந்த வருடத்தில் உயர் மட்டத்தை அண்மித்துள்ளதாகமின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவிக்கின்றது. இதன்காரணமாக நாளாந்த நீர்மின் உற்பத்தி 50 வீதம் வரை அதிகரித்துள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக் ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 100 வீதமாகவும் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 94 தசம் 6 வீதமாகவும், மவுசாக்காலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 90 தசம் 5 வீதமாகவும் அதிகரித்தள்ளது. கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 87 தசம் 7 வீதமாக உயர்வடைந்துள்ளது.

மேலும் வாசிக்க

Huawei தொலைபேசிகளின் தொழில்நுட்ப மேம்படுத்தல்களை நிறுத்தியது கூகுள்!

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரினால் சீனாவின் கையடக்கத் தொலைபேசி சந்தைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைபேசி நிறுவனமான சீனாவின் ஹூவாவி (Huawei) நிறுவனத்தின் Android தொலைபேசிகளின் செயலிகளில் மேம்படுத்தல்களை மேற்கொள்ள முடியாத வகையிலும் தொழில்நுட்ப உதவிகளுக்கு இடையூறு செய்யும் வகையிலும் கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. எவ்வாறாயினும், ஏற்கனவே ஹூவாவி தொலைபேசிகளை தற்போது பயன்படுத்துவோர் தொடர்ச்சியாக அந்த அப்களை (App) பயன்படுத்தவும் அவற்றை மேம்படுத்தவும் முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற ஹூவாவி கையடக்கத் தொலைபேசிகளில் சில கூகுள் அப்கள் உள்ளடக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹுவாவி டெக்னொலஜி நிறுவனத்தை வர்த்தக கறுப்புப் பட்டியலில் உள்ளடக்குவதற்கு, டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் கடந்த வாரம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதற்கமைய, அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதியின்றி அமெரிக்க நிறுவனம் ஒன்றினால் தொழில்நுட்பத்தை பெற்றுக்…

மேலும் வாசிக்க

இலங்கையின் 10க்கும் மேற்பட்ட இணையத் தளங்களுக்கு சைபர் தாக்குதல்!

குவைட்டிலுள்ள இலங்கையின் தூதுவராலயத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையை மைய்யப்படுத்தி முன்னெடுக்கப்படும் 10 இணையத் தளங்களுக்கும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை அவசர கணினி  நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு சைபர் தாக்குதலுக்கு இலக்கான, இணையத்தளங்களின் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இலங்கை அவசர கணினி நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க