‘புரேவி’ புயல் இலங்கை, தென்னிந்தியாவை எதிர்வரும் நாட்களில் தாக்கும்..?

தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. சூறாவளியாக மாற்றமடையும் ‘புரேவி’ புயல் இலங்கை, தென்னிந்தியாவை எதிர்வரும் நாட்களில் ( ந.வ 28 – டிசம்பர் 4) தாக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க

‘நிவர்’ சூறாவளி தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலை கரைக்குக் கிழக்காக ஏறத்தாழ 370 கி.மீ தூரத்தில் வட அகலாங்குகள் 9.3N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 84.5E இற்கும் இடையில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியானது அடுத்த 48 மணித்தியாலங்களில் இலங்கையின் வடக்கு, கிழக்கு கரைகளை அண்மித்ததாக இந்தியாவின் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்…

மேலும் வாசிக்க

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகுமென குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் காலி முதல் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

மின்னல் – இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, யாழ்ப்பாணம், பிராந்திய வளிமண்டல ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதய காலநிலை மாற்றம் தொடர்பில் இன்றையதினம் கருத்து தெரிவிக்கும் போதே ரீ.பிரதீபன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்….வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல், சப்ரகமுவா, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தாற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் பாதிப்புக்களில் இருந்து…

மேலும் வாசிக்க

கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியயல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவை அண்மித்த கடற்பிராந்தியத்தில் நாளை (23) வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென மீன்பிடியாளர்களுக்கு அறிவுறுத்தல் – வளிமண்டலவியல் திணைக்களம்

மேலும் வாசிக்க

காற்றின் வேகம் அதிகரிக்கும்; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான ஆழ்கடல் பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 − 70 KM வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

காலநிலை தொடர்பில் அவதானம்!

புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால், விழிப்புடன் செயற்படுமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, புத்தளம் முதல் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பிராந்தியங்களில் கடல் அலை 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயர்வடையக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 77.5 மில்லிமீட்டர் அதிகூடிய மழைவீழ்ச்சி தெரணியகல பகுதியில் பதிவாகியுள்ளது. ஹங்வெல்ல பகுதியில் 75 மில்லிமீட்டரும் எஹலியகொட பகுதியில் 68 மில்லிமீட்டரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

நாட்டில் இன்று முதல் மழையுடனான வானிலை..?

நாட்டில் இன்று முதல் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ உள்ளிட்ட மாகாணங்களிலும், மன்னார் , முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று 100 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் சில கடற்பிராந்தியங்களில், காற்று மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதனால் கடல்சார் ஊழியர்களும், மீனவர்களும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை.

இந்தோனேசியாவில் தெற்கு சுமத்ராவில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம். இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடும் மழையினால் பதுளை மாவட்டத்தில் இயல்பு வாழ்கை பாதிப்பு.

பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடந்த சிலநாட்களாக கடும் மழை பெய்து வருகின்றமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகின்றது. இன்று (20/07/2020) அதிகாலை முதல் அடைமழை பெய்வதோடு பனிமூட்டமும் நிறைந்து காணப்படுகிறது. அத்தோடு வழமைக்கு மாறாக அதிக குளிர் காலநிலைமையும் உணரக்கூடியதாகவுள்ளது. இதன்காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். பிரதான வீதிகளிலும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் வாகனசாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸாரினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நடராஜா மலர்வேந்தன்

மேலும் வாசிக்க