இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.

இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவுகளுக்கிடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அவர் நாட்டுக்கு வருகை தருவதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா அஹ்மட் தீதியும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இருதரப்பினருடனும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவாரா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களும் வௌியாகவில்லை. இவ்வாறான முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த 2014 இல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

புதிய கொரோனா தடுப்பூசியின் ஊடாக, மக்களை 90 வீதம் பாதுகாக்க முடியும் – ஜேர்மனி

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியின் ஊடாக, மக்களை 90 வீதம் பாதுகாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் Pfizer மற்றும் ஜேர்மனியின் BioNTech ஆகிய நிறுவனங்களே குறித்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இதன்படி, குறித்த தடுப்பூசியின் ஊடாக, மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை 90 வீதம் தடுக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இந்த நிலையில், குறித்த தடுப்பூசி ஆறு நாடுகளில் 43 ஆயிரத்து 500 மக்களிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தடுப்பூசியினை இந்த மாத இறுதியில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, குறித்த தடுப்பூசியின் ஊடாக கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பைப் பெற சிறந்த வழி கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பதாக அமெரிக்காவின் Pfizer மற்றும் ஜேர்மனியின் BioNTech ஆகிய நிறுவனங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – தேர்தல் கண்காணிப்பாளர் உயிரிழப்பு.

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் ஜனாதிபதித் தேர்தல் மேற்பார்வையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். குறித்த அதிகாரி தேர்தல் தினத்தன்று கடமையில் ஈட்டிருந்ததாக உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அவரது உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. குறித்த அதிகாரி கடந்த அக்டோபர் 30 திகதி மேற்கொண்ட பரிசோதனையில் கொவிட்19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. குறித்த தேர்தல் கண்காணிப்பாளரை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்திய போதும், கூறப்பட்ட அறிவுறுத்தல்களை அவர் பொருட்படுத்தாமல் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

கொவிட் தொற்றுக்குள்ளான தமிழக அமைச்சர் உயிரிழப்பு..

கொவிட் தொற்றுக்குள்ளான தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி  நேற்று  இரவு (31.10)11.15 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்திய ஊடகங்கள் இதை உறுதிப்படுத்தின.

மேலும் வாசிக்க

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் கொரோனா தொற்றுறுதி.

உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

பாரீஸை உலுக்கிய இலங்கையர் ஐவரின் படுகொலை!

நபர் ஒருவரின் மோசமான தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் மூவர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகின்றது. உயிரிழந்த அனைவரும் இலங்கையுடன் தொடர்புடைய தமிழர்கள் எனத்தெரிகின்றது. நேற்றுப் பகல் நிகழ்ந்த இந்தக் குடும்பப் படுகொலைகள் தொடர்பில் வெளியான தகவல்கள் வருமாறு:- பாரிஸ் புறநகரான நுவாஸி – லூ -செக் கில் வீடொன்றில் உயிரிழந்தவர்க ளது மாமனார் என்று கூறப்படும் ஆண் ஒருவர் கத்தி மற்றும் சுத்தியல் கொண்டு வெறித்தனமாகப் பலரைத் தாக்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது. அவரது பிடியில் இருந்து தப்பியோடிய இளைஞர் ஒருவர் அருகேயுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். அதனையடுத்துப் பொலிஸாரும் அவசர சேவையினரும் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர். மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் கதவை உடைத்து…

மேலும் வாசிக்க

தொடரும் ஆா்மீனியா மற்றும் அஜா்பைஜான் மோதல்!

போர் நிறுத்த கோரிக்கையை மறுத்து ஆா்மீனியா மற்றும் அஜா்பைஜான் ஆகிய நாடுகள் தொடர்ந்தும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், உடனடியாக மோதலை நிறுத்த வேண்டும் என ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நேற்றைய தினம் வலியுறுத்தியிருந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வரும் இந்த மோதலுக்கான சரியான காரணம் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவல்களும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஆா்மீனியா – அஜா்பைஜான் ஆகிய நாடுகளுக்கிடையில் 1994-ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்குப் பிறகு இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் இது மிகவும் தீவிரமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. நகோா்னோ-கராபக் பிராந்தியம், அஜா்பைஜானின் ஓா் அங்கமாக சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்து எனினும்,  1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு,  அந்தப் பகுதி ஆா்மீனியா ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது எவ்வாறாயினும்,…

மேலும் வாசிக்க

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு கொரோனா தொற்றுறுதி!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நெருங்கிய உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ட்ரம்பிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த புதன்கிழமை நடந்த பிரசாரப் பேரணியின் போது ட்ரம்புடன் ஹோப் ஹிக்சும் சென்றிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தனது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த ட்ரம்ப், தானும் தனிமைப்படுத்திக்கொள்ளப் போவதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. அதில், இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.

மேலும் வாசிக்க

குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் காலமானார்.

குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் காலமானார். அவர் இறக்கும் போது வயது 91 ஆகும். குவைத் அரச தொலைக்காட்சியில் இந்த இறப்பு செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாறும் தலைமுறையும் அவரை எப்போதும் சமாதான மனிதனாக நினைவில் வைத்திருக்கும்.

மேலும் வாசிக்க

கொரோனாவிலிருந்து மீளும் பாலசுப்ரமணியம்.

S.P பாலசுப்ரமணியத்திற்கு இறுதியாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனை அவரது மகன் S.P.B. சரணும் உறுதிபடுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க