சினிமா

அடுத்த சுற்றை ஆரம்பித்த இனியா

Base 1

முன் வரிசைக்கு வருவதற்காக, இன்னும் போராடிக் கொண்டிருக்கிற நடிகைகளில் ஒருவர் தான் இனியா. ஆரம்ப காலத்தில், வாய்ப்பு கிடைத்த அனைத்துத் திரைப்படங்களிலும் நடித்தார். தற்போது, அடுத்த சுற்றை ஆரம்பித்து விட்டார். பொலிவூட் நடிகைகள் அளவுக்கு போட்டோ ஷூட் நடத்தி, அதனைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

மலையாளத்தில் மம்முட்டி, கன்னடத்தில் சிவராஜ்குமார் என முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கிறார். தமிழில் தான் இன்னும் அவர் உரிய இடத்தைப் பிடிக்கவில்லை. தற்போது “காபி” என்ற திரைப்படத்தின் மூலம், மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார்.

தமிழில் சின்னதாக இடைவெளி விழுந்துவிட்டதாகக் கூறியுள்ள இனியா, அது, “காபி” திரைப்படத்தின் மூலம் சரியாகிவிடும் என்றும் 2019ஆம் ஆண்டு, சிறப்பாக இருக்கும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!