சினிமா

பிரான்ஸ் திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்

பரியேறும் பெருமாள் திரைப்படம் பிரான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில், வெளியான படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தில் கருப்பி என்ற பெயரில் நாய் ஒன்று நடித்திருந்தது. ஒரு சில காட்சிகளில் மட்டுமே இந்த நாய் வந்தாலும், அனைவருடைய மனதையும் கவர்ந்து விட்டது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று,  நல்ல கதை கொண்ட சிறிய பட்ஜெட் படம் என பாராட்டப்பட்டது. இதில் நடிகர் கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவரும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் திரைப்பட திருவிழாவில் திரையிடப்படுகிறது.

 

Comment here