சமூகம்

பெண் விரிவுரையாளர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

பெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், சந்தேகநபர் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்றை எடுத்துச் சென்று கொண்டிருந்த போது பொலிஸாரால் சோதனை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, அதில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவரிடம் சம்பவம் குறித்து மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் நேற்று திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!