சமூகம்

வேகமாக பரவிவரும் படைப்புழுவிற்கு தீர்வு

வேகமாக பரவிவரும் சேனா படைப்புழுவை குறுகி காலத்தில் அழிக்க கூடிய கிருமிநாசினி ஒன்றை குளியாபிட்டிய  முனமல்தெனிய பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

எந்தவொரு இரசாயனமும் இதில் பயன்படுத்தப்படவில்லை என ராஜித என்றஅந்த மருத்துவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை,சேனா படைப்புழுவை அழிப்பதற்காக வெவ்வேறு நபர்களால் கண்டுபிடிக்கப்படும் கிருமிநாசினிகளை ஒரே முறையில் பரிந்துரைக்க முடியாது என விவசாய அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எந்தவொரு பதிலீட்டு நடவடிக்கைளை மேற்கொண்டாலும் சோன படைப்புழுவை முழுமையாக அழிக்க முடியாது என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோண் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!