கல்விசெய்திகள்

ஆட்பதிவு திணைக்களம் பாடசாலை அதிபர்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

Base 1

இம்முறை க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும், மாணவர்களின் அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் 50 %வரை தற்போது வரை கிடைத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் அம்மாணவர்க்ளுக்கு உரிய நேரத்தில் அடையாள அட்டையை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

முழுமையக நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 31ம் திகதிக்கு முன்னர் கோரி இட்ருந்த போதிலும் தற்போதுவரை 50% வரை மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே விண்ணப்பங்களை அனுப்பாதவர்கள் மிக விரைவாக விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் கூறியுள்ளது.

error: Content is protected !!
Don`t copy text!