இரத்தினபுரிகல்விமலையகம்

இரத்தினபுரி காவத்தையில் முதன் முதலாக ஆரம்பிக்கபட்ட நடமாடும் நூலகசேவை

இரத்தினபுரி காவத்தையில் முதன் முதலாக ஆரம்பிக்கபட்ட நடமாடும் நூலகசேவை

கல்வியால் உலகை வெல்வோம் எனும் கருத்துடன் பயணிக்கும் தனா அவர்கள் வாசிப்பினூடாக அறிவுக் கண்ணை திறக்கலாம் எனும் எண்ணத்தோடு மலையகம் எங்கும் நூல்களை மாணவர்கள் மத்தியில் இலவசமாக வழங்கி வாசிப்பின் ஆர்வத்தை தூண்டிவருகிறார்.

நடமாடும் நூலக சேவை மலையக கல்வி மாற்றத்திற்காக Rj Thana அவர்களால் மத்திய மாகாணத்தில் லிந்துலையில் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக மலையகம் தழுவிய அனைத்து பிரதேசங்களுக்கும் நடமாடும் நூலகசேவை நடைபெற்று வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக இன்று 2019.04.12ம் திகதி முதன் முதலாக இரத்தினபுரி மாவட்டம் காவத்தை பிரதேசம்,
நீலகாமம் இல:05 இடம் பெற்றது இந்த நடமாடும் நூலகசேவை.

இதனை சக்தி அக்கா, ஆசிரியர் சிவபாலன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந் நிகழ்வில்,

– ஆலய குருக்கள்
– RJ Thana
– சகோதரி ரோஷினி (தமிழ் நாடு இந்தியா)
– பல்கலைக்கழக மாணவன் செ.சுதர்ஷன்

ஆகியோர் கலந்து கொண்டு சிறுவர்களின் வாசிப்பு திறனை வளர்க்க புத்தகங்களை வழங்கி வைத்தனர்.

Comment here