கல்வி

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தித்திற்கு அனுமதி கிடையாது – UGC

Base 1

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தனியார் நிறுவனத்திற்கு பட்டம் வழங்குவதத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது .

“மட்டக்களப்பு பூனனியில் காணப்படும் “ஷரியா பல்கலைக்கழகம்” அல்லது “மட்டக்களப்பு பல்கலைக்கழகம்” என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிறுவனம் குறித்து வெளியாகும் செய்திகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்துகிறது.

இந்த நிறுவனத்துக்கு பட்டப்படிப்பை வழங்குவதற்கு எந்தவிதமான அனுமதியும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கோரப்படவில்லை.

அத்துடன், இவ்வாறான ஒரு அதிகாரம் இதுபோன்றதொரு அமைப்புக்கு வழங்கப்படவில்லை” என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!
Don`t copy text!