செய்திகள்

EPF வழங்காத முதலாளிமாருக்கு சிவப்பு எச்சரிக்கை.

ஊழியர் சேமலாப நிதியத்தை (EPF) வழங்குவதற்கு தவறியுள்ள முதலாளிமாருக்கு இந்த
வருடம் எவ்வித மன்னிப்புகளையும் வழங்கப் போவதில்லை என தொழில் அமைச்சர் நிமல்
சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றினூடாக தொழில் அமைச்சர் இதனை சுட்டிக்காட்டியுள்ளதுடன் , EPF
பணத்தை செலுத்த தவரும் முதலாளிமாருக்கு சிவப்பு எச்சரிக்கையும்
விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 12 பில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படவில்லை
என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 16,000 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில்
அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நீதவான் நீதிமன்றங்களில் காணப்படும் நெருக்கடிகள் காரணமாக இந்த வழக்குகளை
விசாரிப்பதில் தாமதம் நிலவுவதாகவும் தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் அந்த முறைப்பாடுகளை தொழிலாளர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி
விரைவில் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் தொழில்
அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனால் 1958 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தில்
திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொழில் தருநரிடம் தொழிலுக்கு சென்று 06 மாதங்களுக்குள் குறித்த
பணியாளரை ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவு செய்தலை சட்டரீதியாக
உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தொழில்
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button
image download