தொழில்நுட்பம்

Google Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.!

கூகுள் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை தனது வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை
கூகுள் மீட் [Google Meet] அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக வழங்குவதாக
அறிவித்தது. குறிப்பாக இந்த வீடியோ அழைப்பு சேவை பயனர்கள் எளிதாக அணுகக்கூடிய
வகையில் மாற்றி உள்ளது.

இந்த கூகுள் மீட் பயன்பாடு ஆலோசனை கூட்டம் மற்றும் கல்வி சம்பந்தமான
அழைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியம், ஆனாலும் சில மாற்றங்களை
செய்ததுடன் இணையத்தில் மற்றும் ஐஒஎஸ், ஆண்ட்ராய்டு மொபைல் ஆப் பயன்பாடுகள்
வழியாக அனைவரும் இலவசமாக வீடியோ அழைப்பை மேற்கொள்ளலாம் என கூகுள் நிறுவனம்
தெரிவித்துள்ளது.

மேலும் கூகுள் காலெண்டரைப் பயன்படுத்துபவர்கள், அங்கிருந்து எளிதாக தொடங்கவோ
அல்லது மற்றவர்களை இணைக்கவோ முடியும் என கூறப்பட்டுள்ளது. பின்பு இந்த கூகுள்
மீட் மூலம் ஒரு வீடியோ அழைப்பில் 100பேரை பங்கேற்க அனுமதிக்கிறது.

அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜிமெயில் மற்றும் கூகுள் டாக்ஸ் உள்ளிட்ட
வணிகக் கருவிகளின் இலவச பதிப்பகளை கூகுள் நீண்டகாலமாக வழங்கியிருந்தாலும்,
தற்போது தொடங்கப்பட்ட இந்த புதிய சேவையான Google Meet சமமானதாக எதுவும் இல்லை.

கூகுள் மீட் பயன்பாட்டின் இலவச பதிப்பு இந்த மே மாதத்தில் வெளியிடப்படும்
என்றும், பிரீமியம் பயனர்களுக்கு முன்னர் கிடைத்த அனைத்து சேவைகளும்
அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button