விளையாட்டு

IPL அணிக்கு புதிய வீரர்!

காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் செளரப் துபே விலகியதால் புதிய வீரரை சன்ரைசர்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் 2022 போட்டியில் சன்ரைசர்ஸ் அணி, 9 ஆட்டங்களில் 5 இல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 5 ஆம் இடத்தில் உள்ளது.
ஐபிஎல் ஏலத்தில் செளரப் துபே என்கிற வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் அணி. ஆனால் அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதால் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து ஜார்கண்ட் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் சுசாந்த் மிஸ்ராவைத் தேர்வு செய்துள்ளது.
2020 இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற யு-19 உலகக் கிண்ணத்தில் இந்திய அணியில் இடம்பெற்றவர் சுசாந்த் மிஸ்ரா. 5 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகள் எடுத்தார். தற்போது ரூ. 20 லட்சத்துக்கு மிஸ்ராவைத் தேர்வு செய்துள்ளது சன்ரைசர்ஸ் அணி.

Related Articles

Back to top button