Breaking Newsசிறப்புசெய்திகள்விளையாட்டு

IPL 2021 காலவரையின்றி ஒத்திவைப்பு!

IPL இன் பல்வேறு அணிகளின் வீரர்கள், உத்தியோகத்தர்களுக்கு விரைவாகப் பரவிவரும் கொவிட்19 இன் காரணமாக IPL 2021 காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு சபை சற்று முன்னர் அறிவித்துள்ளது.

ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வீரர்கள் கடுமையான ‘பயோ’ பாதுகாப்பு வலையத்தில் உள்ளனர். எனினும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையிலேயே, போட்டித் தொடரின் அனைத்து தரப்பினரையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com