செய்திகள்

ஐபிஎல் நோ பால் சர்ச்சை: ”நடுவர்கள் கண்களை திறந்து வைக்க வேண்டும்” விராட் கோலி சாடல்.

ஐபிஎல் 2019 சீசனில் பெங்களூரில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின இந்த போட்டியில் மும்பை அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் கடைசி பந்தை மலிங்கா நோ பாலாக வீசியதை நடுவர் கவனிக்க மறந்ததையடுத்து போட்டி முடிந்த பிறகு கோலி நடுவரின் முடிவை கடுமையாக சாடினார்.

”நாங்கள் ஒன்றும் கிளப் கிரிக்கெட் விளையாடவில்லை.

ஐபிஎல் லெவலில் விளையாடிக்கொண்டிருக்கிறோம்.

கடைசி பந்து குறித்த நடுவரின் முடிவு அபத்தமானது, ஆட்டத்தில் வெற்றி யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம் என்பதை நிர்ணயிக்கும் முக்கியமான சூழலில் இங்கே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

அவர்கள் மிகவும் கூர்மையாக கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்” என கோலி கூறியிருக்கிறார்.

பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத போட்டியாக நேற்றைய போட்டி அமைந்தது.

யுவராஜ் சிங்கின் ஹாட்ரிக் சிக்ஸர்கள், ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி ரன் குவிப்பு, சாஹலின் சிறப்பான பந்துவீச்சு, விராட் கோலியின் அற்புதமான பௌண்டரிகள், டி வில்லியர்ஸின் இமாலய சிக்ஸர்கள், பும்ராவின் நெறுக்கிப் பிடிக்கும் யார்க்கர்கள், மலிங்காவின் கட்டுக்கோப்பான இறுதி ஓவர் பந்துவீச்சு, அம்பயரின் கவனமின்மை என நிமிடத்திற்கு நிமிடம் ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்த போட்டியாக அமைந்தது.

‘நோ பால்’

பெங்களூரு அணிக்கு கடைசி பந்தில் வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவைப்பட்டது.

மலிங்கா நோ பால் வீசியது டிவி ரீபிளேவில் தெளிவாக தெரிந்தது.  ஆனால் அம்பயர் கவனிக்கவில்லை. ஒருவேளை அந்த பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டிருந்தால் பெங்களூருக்கு வெற்றி பெற மற்றொரு வாய்ப்பு கிடைத்திருக்கக்கூடும்.

கடைசி ஓவரின் மலிங்கா 10 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்ததால் மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விராட் கோலி நடுவரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த நிலையில் ஒரு பந்தை வைடு கொடுத்தது தொடர்பாக எதிரணி வீரர் ரோகித் ஷர்மாவும் போட்டி முடிந்தபிறகு தன்பேச்சில் குறிப்பிட்டார்.

கோலி வெளிப்படையாக நடுவரின் முடிவை சாடியது இன்றைய தினம் முக்கிய விவகாரமாக உருவெடுக்கக்கூடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com