...
விளையாட்டு

LPL தொடரில் பங்கேற்கவுள்ள அணிகளுக்கான வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர்

இரண்டாவது லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்கவுள்ள அணிகளுக்கான வீரர்கள் தெரிவு நேற்றிரவு இடம்பெற்றது.

தொலைக் காணொளி ஊடாக இந்தச் செயற்பாடு இடம்பெற்றதோடு ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இதன்படி, ஜஃப்னா கிங்ஸ் அணிக்கு பஃப் டு ப்ளஸிஸ், கண்டி வோரியர் அணிக்கு ரோவ்மென் பொவெல், காலி க்ளேடியேடர்ஸ் அணிக்கு மொஹமட் ஹஃபிஸ், கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு க்றிஸ் கெய்ல், தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் அணிக்கு இம்ரான் தாஹிர் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் திசர பெரேரா, சரித் அசலங்க, இசுறு உதான, துஸ்மந்த சமீர, தசுன் சானக்க, வனிந்து ஹசரங்க, லஹிரு குமார, குசல் மென்டிஸ், டில்ஷான் முணவீர மற்றும் சாமிக்க கருணாரத்ன உள்ளிட்ட இலங்கை அணியின் முன்னணி வீரர்களும் இந்தத் தொடருக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


Related Articles

Back to top button


Thubinail image
Screen