காலநிலைநுவரெலியாமலையகம்

கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக வெஞ்சர் தோட்டத்தில் 10 வீடுகளுக்கு சேதம்

கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக வெஞ்சர் தோட்டத்தில் 10 வீடுகளுக்கு சேதம்

நோர்வூட் பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள வெஞ்சர் தோட்டத்தில் வியாழக்கிழமை (11.) பிற்பகல் பெய்த கடும் காற்றுடன் கூடிய கடும் மழைக் கராணமாக் 10 வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்துள்ளதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிற்பகல் ஒரு மணியளவில் வெஞ்சர் தோட்டத்தில் வீசிய கடும் காற்றுக்காரணமாக வீடுகளின் கூரைகள் மழையுடன் கூடிய காற்றில் பறந்ததுடன் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வீடுகளில் காண்ப்பட்ட அத்தியவசிய பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பாடசாலை புத்தகங்கள் என அனைத்தும் நீரில் சேதமடைந்துள்ளன.

பேய் காற்றுடன் மழை பெய்ததால் தம்மால் ஒன்றும் செய்ய முடியாது போன நிலையில் தமது வீடுகளில் இருந்த பொருட்களின் பெரும்பாளானவை மழை நீரில் நனைந்து சேதமடைந்துள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

சுமார் ஒன்றரை மணித்தியாலம்; கோர தாண்டவம் ஆடிய மழைக் காரணமாக மக்கள் பெரும் அச்சத்துடன் காணப்பட்டதாகவும் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்ததுடன் மரங்களின் கிளைகளும் முறிந்து வீழ்ந்ததாக வெஞ்சர் தோட்டத்தின் பொது நல உத்தியோகத்தர் தெரிவித்தார்.

பிரதேசத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட வீடுகளின் கூரைகளை தற்காலிகமாக உடனடியாக சீரமைக்க தோட்ட நிர்வாகமும் குடியிருப்பாளர்களும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தொடர்ந்து மழை பெய்யுமானால் மக்களின் உடமைகளை பாதுகாக்க இவ்வாறான நடவடிக்கை தாம் மேற்கொண்டதாகவும் தொடர்ந்து வரும் நாட்களில் சேதமடைந்த கூரைகளை முறைப்படி திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தோட்ட பொது நல உத்தியோகத்தர் தெரிவித்தார்.
மலையக பகுதிகளில் கடந்த சில நாட்களாக பிற்பகல் வேலையில் சில பிரதேசங்களின் கடும் மழை மற்றும் காற்று காணப்படுவதுடன் சிறிய அளவிலான சேதங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி – ஆர்.பிரபா

Comment here