மலையகம்

கல்வி வலயத்தை மாற்றி தருமாறு மக்கள் கோரிக்கை..

டெல்டா ஸ்கூல் malauagam.lk

புசல்லாவை டெல்டா சவுத் டிவிஷனில், கணிஷ்ட பாடசாலையாக இருக்கும் டெல்டா சவுத் தமிழ் வித்யாலய கல்வி வலயத்தை மாற்றி தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ் வித்தியாலயத்தில் 70க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலையானது கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்டிருந்தாலும், இப் பாடசாலை கம்பளை வலயத்திற்கே பிரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாணவர்கள் தங்களுக்கு தேவையான கல்விசார் விடயங்களை பெற்றுக்கொள்ள கம்பளைக்கே செல்லவேண்டியுள்ளது. அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் கண்டி மாவட்டத்துக்குறியதாக காணப்படுவதால், பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுகின்றது.

டெல்டா ஸ்கூல் malauagam.lk

இப்பிரதேசத்தின் அனைத்து அடிப்படை வசதிகள் கொத்மலை பிரதேசத்துக்கே உரித்தானதாக இருக்கின்றபொழுது , இப்பாடசாலை மாத்திரம் ஏன் கம்பளை பிரதேசத்திக்குரியதாக மாத்திரம் வைத்திருக்கின்றனர் என்று அப்பிரதேச கல்விமான்கள், புத்திஜிவிகள் மற்றும் பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் மகஜர்கள் கையளித்த போதும் இதுவரை எந்தவித பலனும் கிட்டவில்லையென அப்பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வருங்கால சந்ததியினரின் அடிப்படைக் கல்வியை பெற்றுக்கொள்வதில் இருக்கும் சிக்கல்களை நிவர்த்திக்க , உரிய அதிகாரிகள் இவ்விடயத்தை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

Comment here