நுவரெலியாமலையகம்

கொட்டகலை – ட்றேட்டன் தோட்டத்தில் இரண்டாம் நாளாகவும் குளவிக்கொட்டுக்கு ஆளாகிய தோட்ட தொழிலாளர்கள் ?

கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் நேற்றைய தினம் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 35 பெண் தொழிலாளர்களும், ஒரு ஆண் தொழிலாளரும் குளவி கொட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,இன்றும் குறித்த பிரதேசத்தில் தொழில் செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

குறித்த சம்பத்தில் 21 ஆண்கள் குளவி கொட்க்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

எனவே தொடர்ந்தும் இப்படியான சம்பவங்களுக்கு முகம் கொடுக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட தோட்ட நிருவாகம் உட்பட அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Comment here