மலையகம்

தோட்ட தொழிலாளர் கலைஞர்களை கௌரவப்படுத்திய கொட்டகலை அரசினர் ஆசிரிய கலாசாலை

கொட்டகலை அரசினர் ஆசிரிய கலாசாலையில் கடந்த 19ம் திகதி முத்தமிழ் கலா மன்றதின் மாபெரும் கலை நிகழ்ச்சி ஹட்டன் பிரின்சி மண்டபத்தில் முதல்வர் திருமதி.சந்திரிக்கா கிங்ஸ்லி ,தலைமையில் ,விரிவுரையாளர் ஜனாப் ஜவ்பர் வழிகாட்டலில் மிகவும் கோலாகலமாக ஆரம்பமானது.

இந்த நிகழ்வில்சிறப்பு அதிதியாக மலையகத்தின் மூத்த எழுத்தாளர்களின் ஒருவரான கலாபூசணம் மு .சிவலிங்கம் கலந்துகொள்ள ,சிறப்பு அதிதிகளாக ஆவண படத்தொகுப்பாளர் செரின் சேவியர் (பணிப்பாளர் -சமூக சிப்பிகள்),நாடக கலைஞர் அஜந்தன் சாந்தகுமார் (மக்கள் களரி ),சட்டத்தரணி நேரு கருணாகரன் ,இவர்களோடு கௌரவ அதிதிகளாக கா.விமலனாதன் ( நாட்டாரியல் ஆய்வாளர் ) ,மூத்த கூத்து கலைஞர் கனகராஜ் , தோற் கருவியில் தேர்ச்சி பெற்ற திருமதி .அங்கமுத்து ஆகிய மலையக கலையோடு தொடர்புப்பட்ட கலைஞர்கள் கலந்து சிறப்பித்தனர்.

காலை 11 மணிக்கு வரவேட்பு ,மங்கள விளக்கேற்றலோடு நிகழ்வு ஆரம்பமானது , இந்த நிகழ்வில் அவை நிறைந்த ஆசிரிய மாணவர்கள் இருபுறமும் இருக்க மேடை நிகழ்வுகள் இரண்டு நேர்த்தியான கல்லூரியின் தொகுப்பாளர்களால் நிகழ்ச்சி நிரலுக்கேட்ப முதலாவது தமிழ் தாய் வாழ்த்தை தொடர்ந்து ,வெற்றி பெற்ற தனி நடிப்பு நாடகம் அரங்கேரியது ,சாதாரண வார்த்தைகளில் சொல்லிவிட முடியா நடிப்பும் எடுத்துக்கொண்ட கருவும் மிகவும் ரசிக்கும் படியாகவும் ஒரு ஆசிரியர்” சமூகத்துக்காக எதனை, எப்படி எல்லாம் சவால்களுக்கு மத்தியில் செய்கின்றார் என்பதுவும், கணவன் மனைவி கிடையேயான உறவு பற்றியும் பல கதாபாத்திரங்களை ஏற்று தனியாளாக நின்று ஆசிரிய மாணவி அரங்கத்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிட்டு கை தட்டல்களோடு எல்லா மனதிலும் வாழுகின்ற கதாபாத்திரமாக மாறிவிட்டு போய் சென்றார்.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்து விட்டு பலவற்றையும் செய்துவிட்டு ஒன்றுமே செய்யாதது போல் இருக்கும் தனது இயல்பான தோற்றத்தோடு தலைமை உரையினை ஏற்ற கலை நிகழ்வின் பொறுப்பாசிரியர் ஜனாப் ஜவ்பர் வந்தவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டதோடு, அவர் நினைத்ததை செய்தார் அதை இப்படி சொன்னார்,

இவ்வாரான நிகழ்வில் மிக முக்கிமான கல்விப்புலத்தை சார்ந்தவர்கள் மிக பிரபல்யமான கலைஞர்கள் அல்லது உச்சம் தொட்டவர்கள் அழைக்கப்படுவார்கள், “துரதிஷ்டவிதமாக இலைகளுக்கும் பூக்களுக்கும் இருக்கக்கூடிய ஒரு மரியாதை நமது சமூகத்தில் வேர்களுக்கு இருப்பதில்லை.இன்று இங்கே அழைக்க பட்டிருக்கும் 04 முக்கியமான கௌரவ அதிதிகளைப் பற்றி சொல்லிவிட்டு அமரலாம் என்று நினைக்கின்றேன்.

அந்த வகையில் பண்டாரவலையைச் சேர்ந்த திரு.விமலநாதன் ஐயா ஒரு தோட்ட தொழிலாளியாக இருக்கக்கூடிய அவர் தன்னுடைய உயிராக தன்னுடைய பிரதான செயற்பாடாக அவர் கருதுவது நாட்டாரியல் ,பல நாட்டாரியல் பாடல்களை தொகுத்ததோடு கொழும்பு ,மட்டக்களப்பு ,கண்டி பிரதேசங்களில் முன்வைத்து அது தொர்பாக உரையாடல்களை முன்வைத்தவர் அவரை இங்கே அழைத்ததில் பெருமிதம் கொள்கின்றோம் .

அடுத்து திரு .கனகராஜ் இவர் ஒரு கூத்து கலைஞர் லவா குசா என்று சொல்லக்கூடிய ஒரு கூத்து மலையகத்தில் எல்படையில் இவரால் மாத்திரமே நிகழ்த்தக்கூடிய நிகழ்வு இவருக்கு அப்புறம் யாரால் இந்த கூத்தை கொண்டு செல்வது என்பது கேள்விகுறியே; எனினு இந்த தள்ளாடும் வயதிலும் இந்த கலையை போற்றுகின்ற அவரை முத்தமிழ் கலை விழாவினுடைய கௌரவ அதிதகளில் ஒருவராக அழைத்ததில் நாம் பெருமிதம் கொள்கின்றோம் .

அடுத்ததாக பறை என்று சொல்லக்கூடிய கருவியை ஏதோ ஒருவகையில் தப்பு ,தப்பு என்று சொல்லி தப்பாகவே ஆக்கிவிட்டதன் காரணமாக தமிழரின் அடையாளம், இது மருத்துவதோடு உளவியலோடு சம்பந்தப்பட்ட ஒரு இசை கருவி ,மறைக்கப்பட்ட கருவி அந்த கருவியை மலையகத்தில் எல்லோரும் முழங்குவதற்காக தயாரித்து வழங்கும் திருமதி .அங்கமுத்து அந்த சகோதரிக்கு இந்த மேடையில் கௌரவம் வழங்குவதில் பெருமிதம் கொள்கின்றோம் .

அடுத்ததாக நாம் தாயின் வயிற்றிலிருந்து வருகின்ற பொழுது முதிலில் எங்களை வாரி அனைத்தவர்கள் யாரென கேட்டால் அம்மா என்போம் ஆனால் அந்த அம்மாவையும் வாரி தனக்குள் கருக்கொண்ட ஒருவர் ஏறக்குறைய 2000கும் மேற்பட்ட பிரசவங்களை பார்த்த ஒரு வி.ஓ.ஜி என்ன அல்லது குழந்தை நல நிபுணர் என்ன அவர்களுடைய அனுபவத்தை விட 2000ம் சுவ பிரசவங்களை பார்த்தவர் ஒரு மிக முக்கியமான ஒரு பெண் ஆளுமை திருமதி .திரேசா பெஸ்டியன் அவர்களையும் இங்கே அழைத்திருகின்றோம் இவர்களினுடாக இங்கு இருக்கக்கூடிய ஆசிரிய மாணவ்ர்களை மலையகத்தில் நல்ல சுவ பிரசவங்களான நல்ல சமூகத்தை உருவாக்கும் சக்தியை கல்லூரியின் முதல்வர் தொடக்கம் உப அதிபர்கள் ,விரிவுரையாளர்கள் வரை உங்களிடம் வழங்கிருக்கின்றோம் என முடித்தார்.

தொடர்ந்தும் நாடகம் அரங்கேரியது நாடகத்தின் கருப்பொருள் மற்றும் நடிப்பு என்பன மிகவும் அருமையாக இருந்தது. மலையக மக்களிடையே காணப்படும் சாதி பிரிவினை பற்றியதான கதை ஒரு திரைப்படத்தை
பார்த்தது போல் இருந்தது.

இதனை தொடர்ந்தும் பேசிய கல்லூரியின் முதல்வர் சந்திரிக்கா கிங்ஸ்லி ஆசிரிய மாணவர்களுக்கு ஒரு கதையை சொல்லி அந்த கதை கூறும் விடயத்தை பகிர்ந்துகொன்றார். இளம் வயது என்பது சின்ன சின்ன அ ற்ப ஆசைகளில் கரைந்து போகக்கூடாது ,இளமையில் நீங்கள் இடுகின்ற அடித்தளமே உங்களை உயரத்துக்கு இட்டுச்செல்லும் ,இந்த 2017-2018 மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள் உங்களிடம் இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கான பொறுப்பை வழங்குகின்றோம். திறம்பட செய்வீர்கள் என நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என குறிப்பிட்டார்.

தொடர்ந்து கலை நிகழ்வுகள் நடந்தன குறிப்பாக நளவெண்பா நாட்டிய நாடகம் வெகுவாக எல்லோரையும் கவர்ந்தது. அழகு நடனம், நடிப்பு எல்லாமே பிரமிப்பு பின்னணி இசை ,பாடல் எல்லாமே ஒரு சர்வதேச அரங்கதில் இருப்பதை போலவே இருந்தது .

இதெல்லாம் நடைபெற கொட்ட கலை முத்தமிழ் காலா மன்றபம் மலையகத்தில் ஒரு வரலாற்று நிகழ்வாக தோட்டத்திலேயே பிறந்து தோட்ட தொழிலாளர்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் கலைஞர்களை மேடை யேற்றி, அழகுபடுத்தி கௌரவித்தது. ஒரு உண்மையான கலைஞருக்கு எப்போது சரியான அங்கீகாரம் கிடைக்குமோ அப்போது அவர்களுக்கு ஆனந்த கண்ணீர் வரும் அது இந்த சபையில் நடந்தது.

தொடர்ந்தும் நிகழ்வில்சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட கலாபூசணம் மு.சிவலிங்கம் மலையம் தொடர்பான பல விடயங்களை பகிர்ந்துகொண்டாலும் மிக முக்கியமாக கல்லூரியில் உள்ள இஸ்லாம் மாணவர்களின் கலை நிகழ்வுகலில் பங்களிப்பு இன்மை பற்றி குறிப்பிட்டதோடு, இஸ்லாமிய சமூகத்துக்கே உரித்தான பல கலைகளை சுட்டிகாட்டி அவற்றையும் இனிவரும் காலங்களில் மேடை ஏற்றவேண்டும் என குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் மலையகத்தில் மலையக மண் வாசனை வீசும் பல நிகழ்வுகளை கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை மற்றும் முத்தமிழ் கலா மன்றம் முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!