நுவரெலியாமலையகம்

நுவரெலியா கல்வி வலயத்தின் புலமைப்பரிசில் விசேட செயலமர்வில் ஆசிரியர்களின் முழுமையான பங்கேற்றலுடன் நிறைவு !

Base 1

நுவரெலியா கல்வி வலயத்தில் இடம் பெற்ற இருநாள் செயலமர்வில் அதிகமான ஆசிரியர்கள் பங்கேற்றலுடன் மிகச்சிறப்பாகச் நிறைவுற்றது.

ஆரம்பக் கல்வி பணிப்பாளர் செல்வராஜா அவர்களின் வழிக்காட்டலுடன்  நடைபெற்ற செயலமர்வில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனடையும் விதத்தில் விரிவுரைகளும் ஆலோசனைகளும் வழிகாட்டலும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.

அசாதாரண சூழ்நிலையிலும் ஏனைய பிரதேசங்களிலும் பார்க்க நுவரெலியா கல்வி வலயத்தின் ஆசிரியர்களின் வருகையும் மாணவர்களின் வருகையும் சிறப்பாக இடம்பெறுகின்றது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக கோட்டக்கல்வி பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்வி பணிப்பாளர் அமரசிறி பியதாச அவர்கள் நுவரெலியா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களின் வருகையும் மாணவர்களின் வருகையும் மிகச்சிறப்பாக இருக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாகவும் ஆசிரியர்களின் பங்களிப்பு இவ்வாறான காலகட்டத்தில் மிகமுக்கியம் என்று குறிப்பிட்டார்.

மேலதிக கல்வி பணிப்பாளர் ஆர்.மோகன்ராஜ் அவர்கள் கூறிப்பிடுகையில் எவ்வாறான சூழ்நிலையிலும் ஆசிரியர்களின் பங்கு இன்றிமையாததொன்று என கூறிப்பிட்டார்.

மிகச்சிறப்பாக கல்வி பணிப்பாளர் ஆ.செல்வராஜா அவர்களால் விரிவுரையாற்றப்பட்டதாகவும் வழிக்காட்டப்பட்டதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!
Don`t copy text!