மலையகம்

நுவரெலியா வீதியில் இடம்பெற்ற கோர விபத்து : 50க்கும் அதிகமானோர் காயம்

வலப்பனை – நுவரெலியா வீதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து நுவரெலியா வீதியில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .

புனித யாத்திரை மேற்கொண்ட சிலரை ஏற்றிச் சென்ற பேரூந்தொன்று மஹா ஊவவத்த கோவிலுக்கு அருகில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment here