நுவரெலியாமலையகம்

பொகவந்தலாவை மற்றும் பூண்டுலோயாவில் இருவர் மரணம்..

Base 1

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிக்குற்பட்ட கெம்பியன் தோட்ட பகுதியல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெம்பியன் மேற்பரிவு தோட்டபகுதியில் 10 ம் தொடர் லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள கால்வாய்யொன்றில்  இருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று காலை 06.45 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை பூண்டுலோயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், முச்சக்கரவண்டியில் சென்ற 16 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!
Don`t copy text!