மலையகம்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் சேவை எதிர்வரும் 11,12 ஆம் திகதிகளில் மஸ்கெலியாவில்!

Base 1

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 11 ஆம் 12 ஆம் திகதிகளில் மஸ்கெலியா பிரதேசத்தில் நடமாடும் சேவையொன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

மஸ்கெலியா பிரதேசத்தில் வாழும் மக்கள் தாம் எதிர்நோக்கும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளிடம் நேரடியாக முறையிடலாம் அத்துடன் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

11 ஆம் திகதி சனிக்கிழமை லுக்கம் தமிழ் மகா வித்தியாலயத்திலும், 12 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை சாமிமலை கெளரவில தமிழ் மகா வித்தியாலயத்திலும், காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது.

இதன் மூலம் அப்பிரதேச மக்களின் பல மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

error: Content is protected !!
Don`t copy text!