மலையகம்

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது

பொகவந்தலாவை – கெசெல்கமு ஓயாவில் அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட செய்யப்பட்ட நபர்கள் இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு போது இந்த குழுவினர் தெரேசியாவத்த பிரதேசத்தில் மூங்கில் குழாய்களை பயன்படுத்தி கெசெல்கமு ஓயாவை இடைமறித்து மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Comment here