செய்திகள்

அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவத் தயாரென சீன ஜனாதிபதி உறுதியளிப்பு

Base 1

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவத் தயாரென சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (15) பிற்பகல் சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதுகாப்பு துறையினரின் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி அவர்களின் கோரிக்கைக்கு அமைய 260 கோடி ரூபா நிதி அன்பளிப்பினை வழங்க சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தோடு இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 150 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 100 ஜீப் வண்டிகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கு சீன ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இருநாட்டு அரச தலைவர்களின் சந்திப்பினைத் தொடர்ந்து இருநாட்டு பாதுகாப்பு துறையினரின் ஒத்துழைப்பிற்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.

error: Content is protected !!
Don`t copy text!