செய்திகள்

இராணுவ சீருடையில் இருந்த நபரை இணங்காண உதவுமாறு கோரிக்கை!

Base 1

தும்மோதரை பிரதேசத்தில் இராணுவ சீருடையில் இருந்த நபர் பற்றிய தகவலறிந்தால் உடன் அறியத்தருமாறு பொதுமக்களிடம் இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த நாட்களில் புத்தளம் நாத்தாண்டியா, தும்மோதரை பிரதேசங்களில் காடையர்களின் தாக்குதலுக்கு உதவி புரிந்ததாக சந்தேகிக்கப்படும் நபர், இராணுவச் சிப்பாயா அல்லது இராணுவச் சீருடையை ஒத்த ஆடையில் இருந்த காடையர் கும்பலில் ஒருவரா என விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அவ்வாறு இராணுவச் சிப்பாய் அவர்களுக்கு உதவி புரிந்தார் என நிரூபிக்கப்படுமிடத்து, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் படைத்தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தகவலறிந்தால் அறியத்தருமாறும் விஷேட தொலைப்பேசி இலக்கத்தையும் வெளியிட்டுள்ளனர். தொலைப்பேசி எண் : 0112514280

error: Content is protected !!
Don`t copy text!