செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவரின் உயிரிழப்புக்குரிய காரணம் வெளியானது.

Base 1

தென்கிழக்கு பல்கலைக்கழக விடுதிக்குள் இருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்ட மாணவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளமை மரண பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உணவுத்துணிக்கைகள் சுவாசக்குழாயில் அடைத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர். எம். இசெட். எம். சர்பராஸ் தெரிவித்துள்ளார்.

மாணவனின் சடலம் இன்று பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பூண்டுலோயா பகுதியை சேர்ந்த கணேஷ்வரன் துர்கேஷ்வரன்  என்ற  24 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் – மூன்றாம் வருடத்தில் கல்வி கற்ற குறித்த மாணவன் கீழே வீழ்ந்திருந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

அக்கரைப்பற்று பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!
Don`t copy text!