செய்திகள்

நாடு முழுதும் சுவரொட்டி போராட்டத்தை ஆரம்பித்துள்ளது இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

ஆசிரியர் -அதிபர்களின் பல்வேறுபட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்காக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் நாடு முழுதும் சுவரொட்டி போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

பின்வரும் கோரிக்கைகளை வைத்து நாடு முழுதும் சுவரொட்டி போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

22 வருட கால சம்பள முரண்பாட்டை நீக்கி ஆசிரியர்களின் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடு!

கொள்ளையடிக்கப்பட்ட 30 மாத கால நிலுவை சம்பளத்தை உடன் வழங்கு!

படிவங்கள் நிரப்புதல் மற்றும் வெளி நிறுவனங்களின் வேலைகளை கற்பித்தலுக்கு தடையாய் இருக்கின்ற செயல்பாடுகளை நிறுத்தி வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு சுதந்திரமாக கற்பிக்க இடம் கொடு .

மேலதிக வேலைகளுக்காக பணியாளர்களை இணைத்துக்கொள்!

2016 க்கு பின்பு நியமனம் பெற்ற அரச ஊழியர்களின் ஓய்வூதிய சம்பள திட்டத்தை இல்லாமல் செய்திருக்கின்றார்கள்.

எனவே ஆசிரியர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் பெற்றுக் கொடு! போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சுவரொட்டி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்.

தீர்வு கிடைக்காத பட்சத்தில் அனைத்து ஆசிரியர்அதிபர்களை ஒன்றிணைத்து தொழிற்சங்க நடவடிக்கை செல்ல வேண்டி ஏற்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!