செய்திகள்

நிவாரண விலையில் LED மின்குமிழ்கள் வழங்கப்படவுள்ளன..!

தற்போது நிலவும் வறட்சியுடன் கூடிய காலநிலையை அடுத்து மின்சார பாவனை அதிகரிப்பதாக மின்சக்தி அமைச்சின் அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் சுலக்சன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்காக எல் ஈ டி மின்குமிழ்களை வழங்கும் நடவடிக்கை அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மாதம் ஒன்றுக்கு 90 மின்னலகுகளுக்கும் குறைந்த வகையில் மின்சாரத்தை பயன்படுத்தும் வீடுகளுக்கு நிவாரண விலையில் இந்த மின்குமிழ்கள் வழங்கப்படவுள்ளன.

இதற்கான பணம் மின் கட்டண பட்டியல் மூலம் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!