செய்திகள்நிகழ்வுகள்

மலையகம்FM ஊடக அனுசரணையில் புப்புரஸ்ஸ கந்தலா கீழ்ப்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பஞ்சரத பவனி நிகழ்வுகள்

Base 1

ஈழத்து மத்திய மலை நாட்டின் எழில் மிக்க நகரான கண்டி மாவட்டத்தின், புப்புரஸ்ஸ கந்தலா கீழ்ப்பிரிவில் கோவில் கொண்டு கருணைக் கடவுளாக வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மனின் வருடாந்த அலங்கார மஹோற்சவ விஞ்ஞாபனப் பெருவிழா - 2019

இம்மாதம் 17ஆந் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கும் தேர்த்திருவிழா நிகழ்வுகள், அன்றைய தினம் எண்ணெய்க்காப்பு நிகழ்வும் விஷேட யாக பூஜைகள் என்பன இடம்பெறும்.

18ஆந் திகதியான வியாழக்கிழமை பாற்குடபவனியும்;

19 ஆந் திகதி பறவைக்காவடியும், தீமிதிப்பும் காலை வேளையில் இடம்பெறுவதோடு, அன்றிரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பஞ்சரத பவனி வெளி வீதியுலா இடம்பெறும்

விநாயகப் பெருமான், சிவன் - சக்தி, அன்னை முத்துமாரியம்மன், வள்ளி தெய்வானையோடு முருகப்பெருமான், சண்டேஸ்வர தேவி என ஐந்து பரிவார தெய்வங்களும் எட்டுத்திக்கிலும் இருக்கின்ற பக்த அடியார்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

20 ஆந் திகதி சனிக்கிழமை பூங்காவந் திருவிழாவும் அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

21 ஆந் திகதியான ஞாயிறுக்கிழமை மாவிளக்கு பூஜை, வேட்டைத்திருவிழா என்பனவற்றோடு மஞ்சள் நீராட்டு விழா இடம்பெற்று இறுதி நிகழ்வாக கரகம் குடிவிடுதலுடன் இவ்வருடத்துக்கான மஹோற்சவ நிகழ்வுகள் இனிதே நிறைவு பெறும்.

அன்னை முத்துமாரியின் அருள் பெற அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இந்நிகழ்வுகளை நீங்கள் நேரலையாக சமூக வலைத்தளத்தில் காண, மலையகம்FM மற்றும் மலையகம்.lk இணையத்தளம் ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!