செய்திகள்விளையாட்டு

IPL : இன்று இறுதி போட்டி.. கிரீடத்தை சுவீகரிக்கும் அணி எது..?

Base 1

ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிரான 3 ஆட்டங்களிலும் மும்பையே வெற்றி பெற்றிருப்பதால் சென்னை அணிக்கு இன்றைய இறுதிப்போட்டியில் கடும் சவால் காத்திருக்கிறது.

ஒன்றரை மாத காலமாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் நாளை இறுதிப்போட்டி. 2019ம் ஆண்டின் ஐபிஎல் கோப்பையை வெல்லும் நோக்கத்தோடு முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்சும், நடப்பு சாம்பியனான சென்னையும் மோதுகின்றன.

நடப்பு சீசனில் சென்னை மற்றும் மும்பை 3 முறை நேருக்கு நேர் சந்தித்து, அந்த ஆட்டங்களில் மும்பை தான் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது. பரஸ்பரம் பலம், பலவீனம் பற்றி இரு அணிகளும் நன்றாக புரிந்து வைத்திருக்கின்றன. இதேவேளை உத்தேச அணிகளின் விபரம் இதோ..

மும்பை இந்தியன்ஸ் உத்தேச அணி: ரோகித் சர்மா (கேப்டன்), டீ காக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கரென் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, மிட்செல் மெக்லேகன் (அ) ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், லசித் மலிங்கா, ஜஸ்பிரிட் பும்ரா.

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணி: எம்.எஸ் தோனி (கேப்டன்), ஷேன் வாட்சன், டுபெளிசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, முரளி விஜய் (அ) துருவ் ஷோரே, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சஹார், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.

error: Content is protected !!
Don`t copy text!