செய்திகள்

O/L பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளுக்கான ஆறு மையங்கள் மூடப்பட்டுள்ளன-பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

எரிபொருள் இன்மையால், கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளுக்கான ஆறு மையங்கள் மூடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் காலை நேரத்தில் கடமைக்கு செல்லமுன், 6 முதல் 7 மணிவரையான காலப்பகுதியில் சென்றால், எரிபொருளை வழங்க எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தயார் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மாலையில் கடமை முடிவடைந்து 5 முதல் 6 மணிவரையான காலத்தில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்றால், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், ஆசிரியர்களுக்கு அவசியமான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button