அரசியல்

ஏதிலிகள் தொடர்பான பிரச்சினை உள்ள நாடுகளில் வலுவான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்

ஏதிலிகள் தொடர்பான பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் அங்கத்துவ நாடுகள் விரிவான மற்றும் வலுவான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளில் 73வது பொதுச்சபை கூட்டத்தொடரில் தனது பிரதான உரையை இலங்கை நேரப்படி இன்று அதிகாலை ஆற்றிய போது அவர் இதைனை கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் இந்த வருட பொதுச்சபை கூட்டத்தொடர் ‘ஐக்கிய நாடுகள் சபையை சகல மக்களுக்கும் அணுகச் செய்தல், நீதியும் அமைதியும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகத்திற்கான உலகளாவிய தலைமைத்துவத்தின் ஒன்றிணைந்த பொறுப்பு’ எனும் தொனிப்பொருளில் நடைபெறுகிறது.

அத்துடன், இந்த பிரதான அமர்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அரச தலைவர்களுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணைந்துகொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணியளவில் மாநாட்டின் தனது விசேட உரையை ஆற்றினார்.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!