அரசியல்நுவரெலியாமலையகம்

சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்செல்வன் தெரிவிப்பு

சமூக மேம்பாட்டிட்கு சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும். அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்செல்வன் தெரிவிப்பு.

அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட டயகம நகர முச்சக்கரவண்டி சாரதிகளுடனான விசேட சந்திப்பு ஒன்று அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வன் தலைமையில் டயகம நகர மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இச் சந்திப்பின் போது  நகர அபிவிருத்தி திட்டம், முச்சக்கரவண்டிகளை பதிவுசெய்தல் மற்றும் தரிப்பிட புணரமைப்பு தொடர்பாகவும் வீதி ஒழுங்கு முறை தொடர்பான சட்டதிட்டங்கள் தொடர்பாகவும் கலந்துறையாடப்பட்டது.

இதன் போது,எம் சமூகத்தில் முக்கிய பங்கினை வகிக்கும் முச்சக்கரவண்டி சாரதிகளின் குறைநிறைகள் தொடர்பாக கலந்துறையாடி அவர்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் என்ற ரீதியில் முன்னின்று செயல்படுவதாகவும் டயகம நகரில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தை அபிவிருத்தி செய்து முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதாலும் அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியுமெனவும், மேலும் எம் சமூகம் கல்வி,பொருளாதார,கலாச்சார ரீதியில் முன்னேற்றம் அடைந்து ஏனைய சமூகத்தினருக்கு ஓர் எடுத்துகாட்டான சமூகமாக அமைய அரசியல் கட்சி பேதமின்றி ஒன்றினைந்து செயற்படவேண்டும் எனவும்,புதிதாக அமைக்கப்பட்ட அக்கரபத்தனை பிரதேச சபையின் ஊடாக சபை தலைவர் என்ற ரீதியில் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் ஆலோசணையின் ஊடாக பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என கருத்து தெரிவித்தார்.

இச்சந்திப்பில் அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வன், உறுப்பினர்களான சுப்ரமணியம், ரதிதேவி மற்றும் டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அக்கரபத்தனை பிரதேச சபை செயலாளர், முச்சக்கரவண்டி சாரதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

-குலசேகர் லீபன்

Comment here

error: Content is protected !!
Don`t copy text!