விளையாட்டு

IPL: இறுதிப் பந்தில் கதையை மாற்றி, 4வது முறை வெற்றியை உறுதிப்படுத்தினார் மலிங்க!

Base 1

சென்னை அணியை ஒரு ஓட்டத்தினால் வீழ்த்தி மும்பை அணி நான்காவது முறையாகவும் ஐ.பி.எல்.கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 149 ஓட்டங்களை குவித்தது.

149 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணி , தனது நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்தது.

ஒரு கட்டத்தில் சென்னையின் வெற்றிக்கு 18 பந்துகளில் 38 ஓட்டங்கள் தேவை என்ற நிலையிருந்தது. அதன் பின்னர் 12 பந்துகளில் 18 பந்து என்ற நிலையிருக்க 18.2 ஆவது ஓவரில் பிராவோ 15 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

வெற்றிக்கு 6 பந்துகளுக்கு 9 ஓட்டம் என்ற நிலை உருவானது. இறுதி ஓவருக்காக மும்பை  அணி சார்பில் மலிங்க பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார்.

வெற்றிக்கு 3 பந்துகளுக்கு 5 ஓட்டம் என்ற நிலையிருக்க சென்னை அணியின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட வோட்சன் 59 பந்துகளில் 80 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இறுதியாக சென்னை அணிக்கு 2 பந்துகளுக்கு 4 ஓட்டம் என்ற நிலையிருந்தது.

தாகூர் களமிறங்கி 19.5 ஆவது பந்தில் இரண்டு ஓட்டங்களை பெற, ஒரு பந்துக்கு 2 ஓட்டம் தேவை என்றானது. இறுதிப் பந்தில் மலிங்க எல்.பி.டபிள்யூ முறையில் தகூரை வெளியேற்றி மும்பை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த வெற்றிமூலம் மும்பை அணி நான்காவது முறையாகவும் ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!
Don`t copy text!