செய்திகள்நுவரெலியாமலையகம்

Sustainable Development Network மூலம் இளைஞர் யுவதிகளுக்கு சுய தொழில் பயிற்சி..

நுவரெலியா ஹீ நகர் இளைஞர் யுவதிகளுக்கான சுய தொழில் பயிற்சியும் இளம் தொழில் முயற்சியாளர் கூட்டுறவு சங்க அங்குரார்ப்பனமும் 2021.02.26 அன்று ஹீ நகர் ஆலய மன்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது இளைஞர், யுவதிகளுக்கு காளான் வளர்ப்பு தொடர்பான செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டதோடு விதைகளும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வை Sustainable Development Network ஒழுங்கு செய்ய அனுசரனையை நுவரெலியா மாநகரசபை உறுப்பினர் கேதீஸ் வழங்கியிருந்தார்.

நிகழ்வில் கொட்டகலை அரசினர் ஆசிரிய கலாசாலையின் அதிபர் திருமதி சந்திர லேகா கிங்ஸ்லி ,சமூக செயல்பாட்டாளர்களான சன்முக ராஜா ,கிங்ஸ்லி கோமஸ், சதிஸ் ராமசாமி,கேதீஸ் ராமையா மற்றும் கூட்டுறவு சங்க உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button