மலையகத்தின் தேசிய கூத்தான காமன் கூத்து. 

ஆங்கிலேயரின் ஆட்சியின் போது தமிழகத்தில் இருந்து இலங்கையின் மலைநாட்டிற்கு கூழித்தொழிலுக்காக அழைத்துவரப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து அவர்களின் உழைப்பையும் உடைமைகளையும் மாத்திரம் சுமந்து வரவில்லை. அவர்கள் பின்பற்றிய கலை, கலாச்சார பண்பாடுகளையும் சுமந்து வந்தனர். பிரித்தானியரின் ஆட்சியின் போது காணப்பட்ட அடக்குமுறையாலும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இன்மையாலும் நடந்தேரிய கொடுமைகளாலும் மீள முடியாத துன்பத்திற்கு ஆளானார்கள். இதன் தாக்கம் இன்றும் எம் மத்தியில் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட நெருக்கடியில் இருந்து மீள்வதற்காகவும் மன அமைதியை பெறுவதற்காகவும் பாரம்பரிய கலைகளில் ஈடுபட்டு வந்தனர். இவற்றை இன்றும் பாதுகாத்து வைத்துள்ளனர். இவற்றில் மிக முக்கியமானது கூத்துக்கலையே. கிராமத்தின் மண்வாசனையையும், கிராம மக்களது வாழ்வாதாரங்களையும், அவர்கள் மதம் மீது கொண்ட பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைவது கூத்துக்கலை. கூத்துக்கள் பல்வேறு செய்திகளை சமூகத்திற்குச் சொல்கின்றன. முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்கிற்காகவும், தங்களது களைப்பைப்…

மேலும் வாசிக்க

இலங்கையில் நாங்கள் யார்? (பேச மறுக்கப்பட்ட கதை)

இலங்கை என்றால் இந்த உலகமே அறிவது வடகிழக்கு யுத்தத்தையும் யாழ்ப்பாணத்தவரின் வேறுபட்ட தமிழையும் தொனியையும் தான். அதையும் கடந்து இந்தியத்தமிழர் எனும் பெயரில் மலைகளுக்குள் சிக்குண்ட மலையகத்தமிழரெனும் இந்திய வம்சாவளித் தமிழரின் வரலாற்றை யாரும் திரும்பிப் பார்க்க நினைப்பதில்லை என்பது நிதர்சனம். இந்தியர்களுடன் நான் உரையாடல்களில் ஈடுபடுகையில் நீங்கள் இலங்கையர் என்பதை நம்பவே முடியவில்லை; “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் வருவது போல இலங்கைத் தமிழ் தென்படவில்லையே என்கின்றனர். நானும் பலருக்கு விளக்க முற்படினும் என்னால் ஓரிரு வரிகளில் எங்கள் வரலாற்றை வரையறுக்க இயலவில்லை என்பது உண்மை. இவ்வாறு அடையாளம் காட்டிக்கொள்ள முடியாமல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வாயடைத்துப் போகும் எங்களின் கோலமும் தான் என்ன? இந்த உலகமே அதிகம் பேசியது வடகிழக்குத் தமிழரைப்பற்றித்தான். 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தான் ஈழத்தமிழர்…

மேலும் வாசிக்க