அறிவியல்தொழில்நுட்பம்

தானாகவே சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய செயற்கை கலம் உருவாக்கம்!

ஒளித்தொகுப்பின் ஊடாக இரசாயன சக்தியை பிறப்பிக்கக்கூடிய கலத்தினை செயற்கை முறையில் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர்.

இக்கலங்கள் முற்றிலும் இயற்கையான கலங்களை ஒத்த கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதனை ஜப்பானில் உள்ள டோக்கியோ தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்களே உருவாக்கியுள்ளனர்.

இக்குழுவிற்கு தலைமை தாங்கிய Yutetsu Kuruma என்பவர் கருத்து தெரிவிக்கையில் தான் முதலில் சவ்வுகளில் காணப்படும் கலங்கள் போன்று உயிருள்ள செயற்கை கலங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே தற்போது சுயமாக சக்தியை பிறப்பிக்கக்கூடிய இக்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இப் புதிய கலமானது இலிப்பிட் மேற்படையினைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Comment here