இணையம்தொழில்நுட்பம்

வட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

Base 1

வட்ஸ் அப்செயலியிலுள்ள குறைப்பாட்டை பயன்படுத்தி அதில் சிலர் ஊடுருவ முயன்றுள்ளதாக வட்ஸ் அப் நிறுவனம் தெரிவிக்கின்றது,

திறன்பேசி உள்ளிட்ட மின்னணு கருவிகளில் ஊடுருவ முயன்றவர்கள் வட்ஸ்அப்பில் கண்காணிப்பு மென்பொருட்களை பதிய முயன்றுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன,

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வட்ஸ் அப்  செயலியின் அடையாளங்காணப்பட்ட சில பயன்பாட்டாளர்களை மாத்திரம் இலக்கு வைத்து  திறன்மிக்க நபர்கள் இந்த ஊடுருவலை மேற்கொள்ள முயற்சித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது,

இதிலிருந்து வட்ஸ் அப் பயனாளர்களை காப்பாற்றுவதற்கான மேம்படுத்தப்பட்ட பதிப்பை கடந்த வௌ்ளிக்கிழமை அந்த நிறுவனம் வௌியிட்டுள்ளது,

அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்ஸ் அப்பின் 1.5 பில்லியன் பயனாளர்களை புதிய பதிப்பை மேம்படுத்திக் கொள்ளுமாறு அந்த நிறுவனம் கேட்கின்றது,

error: Content is protected !!
Don`t copy text!