...
செய்திகள்

TIK TOK சர்ச்சையால் பறிபோன 17 வயதான இளைஞனின் உயிர்.

TIK TOK சமூக ஊடக வலையமைப்பினால் ஏற்பட்ட மோதல் ஒன்று காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு − கிரான்பாஸ் பகுதியில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரந்திய உயன தொடர்மாடி குடியிருப்புக்கு தனது நண்பர்களுடன் குறித்த இளைஞன் சென்றுள்ளார்.

இதன்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த மற்றுமொரு தரப்பினர், TICTOK வீடியோ தொடர்பில் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதுடன்,  குறித்த இளைஞனை கத்தியால் குத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கிரான்பாஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் TIK TOK சமூக ஊடகம் கடந்த சில வருடமாக பிரபல்யமடைந்து வருகின்ற நிலையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அதற்கு தடை  விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen