செய்திகள்

(video) இன்றும் பல பகுதிகளில் வெடி குண்டுகள் மீட்பு

இன்று பல பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படியில் நுவரெலியா ஹவா எலிய பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாரால் இன்று பகல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் ஹாவா எலிய பகுதியிலுள்ள ஆறு ஒன்றிலிருந்து டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

காட்சி அனுசரணை newsfirst

 

 கொழும்பு முகத்துவாரத்தில் 21 கைகுண்டுகளுடன் மூவர் பிடிபட்டுள்ளனர்.

குற்றத்தடுப்பு பிரிவினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று பகல் முகத்துவாரம் பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது 6 வாள்களும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் உள்ளிட்ட 21 கைக்குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பூகொட பகுதியிலுள்ள பாழடைந்த காணியொன்றில் வெடிச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

மொறட்டுவை பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று பாதுகாப்பான முறையில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் இன்று காலை முதல் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் கிடைத்ததென பொலிஸார் கூறினர்.

அதில் எவ்வித வெடிபொருளும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

 

வத்தலை நாயக்கந்த பிரசேத்தில் சந்தேகத்துக்குறிய லொரியொன்றை பொலிசார் இன்று கைப்பற்றியுள்ளனர்.

இன்றைய தினம் பிற்பகல் கொட்டாஞ்சேனை பொலிஸார் வெல்லம்பிட்டியில் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளனர். இவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து இந்த லொறி கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com