உலகம்

(Video) பங்களாதேஷில் கோர விபத்து

பங்களாதேஷில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் டாக்காவிற்கு கிழக்காக 100 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பிரமன்பாரியா என்ற இடத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பங்களாதேஷின் தென்பிராந்திய துறைமுகநகராகிய சிட்டகொங் நோக்கிப் பயணித்த ரயிலும், தலைநகர் டாக்கா நோக்கிப் பயணித்த ரயிலுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்துக்குள்ளான ரயில்களிலிருந்து பயணிகளையும், காயமடைந்தவர்களையும், சடலங்களையும் மீட்பதில் மீட்புக்குழுவினர் பாரிய சிரமங்களை எதிர்கொண்டதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்தியாவின் ஹைதராபாத்தில் நேற்றுக்காலை இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download