செய்திகள்மலையகம்

(video) மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இளைஞன் ஒருவனின் சடலம் மீட்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று காலை இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை பொலிஸார் எமது செய்திப்பிரிவுக்கு இதனை உறுதிப்படுத்தினர்.

பொது மக்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் குறித்த சடலத்தை அடையாளம் கண்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்ட சடலம் மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் டிக்கோயாவை சேர்ந்த காளிஸ்வரன் நந்தகுமார்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சடலமாக மீட்கப்பட்டவர் 24 வயதானவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சடலமானது இரு தினங்களுக்கு முன்னர் நீர்தேக்கத்தில் விழுந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
image download