செய்திகள்மலையகம்

(Video /Photo) பணிப்பெண்ணாக சவுதிக்கு சென்று சடலமாக திரும்பிய சந்தனமேரி! விபரம் இதோ..

சந்தன மேரியின் சொந்த ஊர் மஸ்கலியா சாமிமலை பிரதேசத்தில் நிலாவத்த தோட்டத்தில் கணவன் மற்றும் 4பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

தோட்ட வருமானம் தனது 4 பிள்ளைகளை படிக்க வைப்பதற்கு தமது வாழ்வாதார பற்றாக்குறை காரணமாக 2012 ம் ஆண்டு அவிசாவளை பிரதேசத்திற்கு தனியார்க்கு சொந்தமான தோட்டத்தில் கூலி வேலைக்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.

சந்தன மேரியும் அவர் கணவரும் பெரிதாக படிக்காத காரணத்தால் தமது 4 குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து சமூகத்தில் நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற கனவில் குழந்தைகளை அவிசாவளை புவக்பிட்டி தமிழ் மகாவித்தியாலயத்தில் படிக்க வைத்தார்.

கணவர் சசிக்குமார் கொஸ்கம பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் ரொட்டி போடும் வேலை செய்து வந்துள்ளார். சந்தன மேரியும் தனியார் தோட்டத்தில் கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

இவர் அடிக்கடி பாடசாலைக்கு சென்று பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பற்றி கேட்டு அறிந்து வந்துள்ளார்.

தொடர்ந்து பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு சிரமம் ஏற்பட்டதால் 2 வருடம் வெளிநாட்டுக்கு செல்ல கணவருடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்து மஸ்கலியா பிரதேசத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைத்து கொடுக்கும் /subagent மூலமாக கொழும்பில் people’s park இருக்கும் sio international recruitment agency யில் தனது கடவு சீட்டினை கொடுத்து 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி சவூதி அரேபியா நாட்டிற்கு வீட்டு பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்றுள்ளார்.

அங்கு சென்று ஒரு வாரத்திற்கு பின்னரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டாரிடம் பேசியுள்ளார்.

அப்பொழுது அவர் தனது வேலை செய்யும் இடத்தில் அவரை அடித்து கொடுமை படுத்தியதாகவும் அவரால் அங்கு இருக்க முடியவில்லை என்றும் சொந்த நாட்டிற்கு மீண்டும் எடுக்கும் படி அழுதுள்ளார்.

இதைக்கேட்ட குடும்பத்தினர் வெளிநாட்டு அனுப்பி வைத்த agency கு முறையிட்டுள்ளனர்.

அதற்கு அவர்கள் ஒன்றும் பிரச்சினை இல்லை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சமாதானம் செய்து அனுப்பியுள்ளார்.

அவர்களின் பேச்சை கேட்டு இவர்கள் வீட்டிற்கு சென்றனர் 3 மாதங்களின் பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தனது நிலையை கூறி அழுதுள்ளார்.

அதன் பின் சந்தனமேரி வீட்டார் மனவருத்தத்துடன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

அதன் பின்னர் angency யிடம் சென்று சந்தனமேரியை மீட்டு தரும்படி கேட்டார் அதற்கு அவர்கள் இவர்கள் முன்னிலையில் தொலைபேசியில் அழைத்து சந்தனமேரியிடம் பேசுவது போல் நாடகம் ஆடியுள்ளார்.

ஆனால் சந்தனமேரியிடம் வீட்டார் யாரையும் பேச விடவில்லை இதனால் மனமுடைந்த சந்தனமேரி வீட்டார் மறுபடியும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

அப்போது பணியகத்தில் agencyயை அழைத்து எச்சரிக்கை செய்துள்ளார் இதனால் கோபம் கொண்ட agency சந்தனமேரி வீட்டாரை தகாத வார்த்தைகளால் ஏசி அடித்து விட்டு ஆறு லட்சம் பணம் கொடுத்தால் அவரை வரவழைத்து தருவதாக கூறி உள்ளார்.

அன்றாட அடிப்படை வசதிகளே இல்லாதவர்களிடம் இப் பெரும் தொகை பணத்தினை கேட்டதால் அவர்கள் வேறு வழியின்றி சந்தனமேரி யின் தாயார் agencyயின் காலில் விழுந்து அழுதுள்ளார்.

ஆனால் அவன் எதையும் காதில் வாங்காமல் திருப்பி அனுப்பி வைத்தனர்.

ஆனால் சந்தனமேரியின் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை தொடர்ந்து தொலைபேசியில் அழுதுகொண்டே பேசியுள்ளார். 2019 05.29 அன்று சந்தனமேரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருடைய தம்பிக்கு தனது நிலையை கூறி அழுதுள்ளார்.

அன்று அவர் இறுதியாக பேசிய வார்த்தைகள் அவரை உயிருடன் சொந்த நாட்டிற்கு எடுக்க முடியாது போனால் சடலத்தையாவது எப்படியும் எடுத்து விடும்படி கேட்டுக் கொண்டார்.

இவ்வாறு பேசிக்கொண்டு இருந்த போதே தொலைபேசி துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் 2019.06.05 சந்தனமேரி மேரி இறந்து விட்டதாக தகவல் வழங்கப்பட்டது.

இச்செய்தி அறிந்த கணவர் பதட்டம் அடைந்து அவசரமாக வீட்டுக்கு வரும்போது விபத்தில் சிக்கி கால் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 3 மாதம் சிகிச்சை பெற்று வந்தார் இதனால் அவரால் அவர் மனைவி சந்தனமேரியின் சடலத்தை எடுக்க முடியாது போனது.

அத்துடன் அவரின் மகன் திலக் வயது 16, மகள் தயானி வயது 18 இவர்கள் இருவரும் பாடசாலை கல்வியை இடை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது தாயின் மரணம் தந்தையின் நிலைமை அதற்கான காரணமாக அமைந்தது.

இச் சூழ்நிலையில் நேற்று முன்தினம் 4ம் திகதி சந்தன மேரியின் சடலம் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்து.

சவூதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அவரது மரணசான்றிதழில் இயற்கை மரணம் என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இலங்கை நீர்கொழும்பு வைத்தியசாலையின் அவசர மரண பரீட்ச்சகர் வைத்தியர் சிறி ஜயந்த விக்ரமரத்ன அவர்களால் வழங்கப்பட்ட மரணசான்றிதழில் தூக்கிட்டதால் இம் மரணம் ஏற்பட்டு இருக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்பத்தினருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சடலத்தை உறவினர்களுக்கு கையளித்த போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் சடல இறுதி சடங்கிற்காக 30ஆயிரம் ரூபாய் பணம் வழங்கியுள்ளார்.

அவிசாவளை இங்குறல வெரலிபிட்டிய அவர்களின் வாடகை வீட்டிற்கு சடலத்தை எடுத்து சென்ற போது வீட்டின் உரிமையாளர் சடலத்தை வீட்டுக்குள் கொண்டு செல்வதை தடுத்துள்ளார்.

இதன் காரணமாக சந்தனமேரியின் சடலம் சில மணித்தியாலங்கள் வாடகை வீட்டின் வாசலில் வைத்திருந்து இங்குரல பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

குடும்ப கஷ்டத்திற்காக வெளிநாடு சென்ற சந்தனமேரி குடும்பத்திற்கு கஷ்டம் கொடுத்து இயற்கை எய்தினாலும் தனது 12 வயது மகள் கபிலாவும் 14 வயது கோகுலும் தமது தாய் வெளிநாட்டு க்குச்சென்று வரும் போது பல பெட்டியில் விளையாட்டு பொருட்கள் கொண்டு வருவேன் நன்றாக படிக்குமாறு சொல்லிச் சென்றதை மனதில் வைத்துக்கொண்டு இருக்கின்றனர் தாய் சவப்பெட்டியில் வந்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இருக்க வீடு இன்றி வெளிநாடு சென்ற சந்தனமேரிக்கு இறந்த பிறகு சடலத்தை வைக்கவோ இறுதி கிரிகை செய்யவோ வீடு ஒன்று இருக்கவில்லை.

காலுடைந்த சசிக்குமாரும் பிள்ளைகள் 4 பேரும் தீராத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related Articles

Back to top button