உலகம்

எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது; பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு

Base 1

எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இந்து தீவிரவாதம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கமல்ஹாசன் கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள பிரதமர் மோடி, உலகமே ஒரு குடும்பம்  என்பதே இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை என குறிப்பிட்டுள்ளார். 

ஒருவர் பயங்கரவாதியாக இருந்தால், அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது’ எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்று அளித்த பேட்டியில், மோடி இவ்வாறு கூறியுள்ளார். 

இந்நிலையில், ஹிந்து தீவிரவாதம் குறித்து பேசியது தொடர்பாக, கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

error: Content is protected !!
Don`t copy text!