செய்திகள்

X-Press Pearl கப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடவுள்ள ஐ.நா குழு

ஜக்கிய நாடுகள் சபையின் சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் விசேட நிபுணர்கள் குழு ஒன்று இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீ விபத்திற்கு உள்ளாகி கடலில் முழ்கியுள்ள MV எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்ளை மதிப்பீடு செய்வதும் அதற்கான எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்குவதும் மற்றும் ஆய்வு நடவடிக்கைகளுக்காக வருகை தரும் இக்குழுவில் மூவர் இடம்பெற்றிருப்பதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.

அதற்கமைய, நச்சுப் பொருட்கள் தொடர்பான நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பில் பகுப்பாய்வு செய்யும் நிபுணர் உள்ளிட்ட குழு நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

Related Articles

Back to top button